💓 வலிமை - 08 💓

259 14 8
                                    


"டேய் அஷ்வின், தெரியாம தான் லில்லிப்பூக்கள பறிச்சேன்டா உன்ட உசுரு என்று தெரியாம. அதுக்காக என்ன எங்கயேயும் கூட்டிட்டி போய் தள்ளிக் கொன்று விடாதேடா. நீ என்ன சொன்னாலும் நா செய்றேன். நா வாழ வேண்டிய வயசுடா" என்று பேச்சுப்பொட்டியை ஆஷா திறக்க,
"ஆஷா, கொஞ்ச நேரம் வாய கொஞ்சம் மூடேன். இப்படி பேசி என்ன கொல்வதென்டு தெரிந்து இருந்தா பெரிய புடவ பாதி ஒன்னு கொண்டு வந்து கண்ணோட வாயையும் கட்டி விட்டு இருப்பேன்" என்று அஷ்வின் சொல்ல, அவளும் அமைதியாக, புன்னகைத்தபடியே கூட்டிச் சென்று ஓர் இடத்தில் வைத்து அவளது கண்களிலிருந்து தன் கரத்தை எடுத்தான் அஷ்வின்.

மெதுவாக கண்களை திறந்தாள் ஆஷா தன் கண்களை மூடி, அழைத்து வந்த இடத்துல என்ன அப்படி இருக்கிறது என்று மனதால் நினைத்தபடி. கண்கள் விரிய பார்த்தாள் அவள், அவள் முன்னால் உயரமான நீர்வீழ்ச்சியொன்று கொட்டிக் கொண்டு இருந்தது. நீரானது நுரை நுரைகளை கக்கிக் கொண்டு இருந்தது. சிறு சிறு  மழைத்துளிகளோடு, நீர்வீழ்ச்சியின் நீர்த்துளிகளும் இருவர் மேனியை நனைக்க, தென்றல் காற்றும் அவளது தோளையும், கைகளையும் தடவிச் சென்றது. அந்த நீர்வீழ்ச்சியின் மேலே சிறிய வானவில்லொன்றும் தோன்ற, இன்னும் அவளது மனம் ஆனந்தமடைந்ததை கண்ட அஷ்வின் அவனை அறியாமலே அவளில் தன்னை தொலைத்துக் கொண்டு இருந்தான்.

மேலும் தென்றல் வீசி அவளை சீண்டிக் கொண்டு இருக்க, ஆஷா தன் கரத்தை மற்றைய கரத்தால் தேய்ப்பதை கண்ட அஷ்வின் அவள் அணிந்திருந்த துப்பட்டாவை விரித்து அவளது கரங்கள் முழுவதையும் மூடிவிட்டு துப்பட்டா பறந்து போகாமல் தன் கரத்தால் அவளது கரத்தின் மேல் பிடித்துக் கொண்டான். அவனது செய்கையிலும், ஓர் ஆடவனின் சீண்டலும் அவளது மேனியில் மின்சாரத்தை பாய்ச்சிக் கொண்டு இருந்ததையும் உணர்ந்தாள். அஷ்வினை திரும்பி பார்க்க, அவனது கண்களும் அவளுக்கு எதையோ சொல்ல வர, இருவரும் பார்வைகளை வேறு வேறு பக்கத்திற்கு செலுத்தினர்.

"போகலாமா ஆஷா??" என்று அஷ்வின் கேட்க,
" கொஞ்சம் wait. Photos கொஞ்சம் எடுத்துட்டு போகலாமே" என்று தன் cell phone யை எடுத்து நீர்வீழ்ச்சியையும், சுற்றுமுற்றும் எடுத்தவள்,
"அஷ்வின், உங்க கூட ஒரு selfie, if you don't mind" என்று கேட்க,
" சரி" என்று அஷ்வினும் சம்மதிக்க, சிரித்தபடியே ஓடி வர, பாறையில் படிந்த ஈரப்பாசிபடலத்தை காண தவறி, அவளது கால்கள் வழுக்க, அஷ்வின் அவளது இடையை ஒரு கரத்தாலும், மற்றைய கையால் அவளது தலையையும் பிடிக்க, உடனே ஆஷா தன் கையில் cell phone தவறவிட்டுட்டேனோ என்று பார்க்க, இல்லை, அப்பாடா என்று screen ஐ on செய்யும் button இற்கு பதிலாக அடுத்த பக்க button யை அழுத்த, அஷ்வினின் பிடியில் இருந்த ஆஷாவை அக்கணம் அவளது ஃபோன் camera ஆனது புகைப்படமாக்கியது. அந்த சத்தத்திற்கு இருவரும் திடுக்கிட, உடனே அவனின் பிடியில் இருந்து விலகியவள், அஷ்வின் என்ன நினைத்து இருப்பான்?? நா வேண்டுமென்று click செய்தேன்னு நினைத்து இருப்பானோ?? கண்டு எத்துன நாளாகுது?? அதுக்குள்ள நம்மல பத்தி கெட்ட எண்ணம் வரவைத்து விட்டோமோ.. ச்சே... என்று தன்னை தானே அளுத்தபடி, அவனது முகத்தை கூட பார்க்காமல்,
" வாங்க போகலாம்" என்று சொன்னாள். இவளது மனதை அறிந்துக் கொண்டவன், பேசாமல் முன்னே நடக்க, அவள் பின்னால் நடந்தாள். அந்தப் பயணம் முழுவதும் மௌனமாகவே போனது.

காதலின் வலிமை (completed) Where stories live. Discover now