💓 வலிமை - 16 💓

167 9 9
                                    


"ஆஷா, பேருந்தில வர சொன்னது இப்படி தூங்கவா?? எழுந்திரு papa" என்று சொல்ல,
மெதுவாக அவன் தோளிலிருந்து எழுந்தாள்.
"இப்படி என்ட baby ட தோள்ள தூங்குறது கூட நல்ல சுகம் தானே. எந்த நாளும் கிடைக்குமா இந்த சுகம்?" என்றாள் ஆஷா.

" papa, அங்கப் பாரு, அந்த கடைய நினைவு இருக்கா?? அன்னைக்கு வர்ர நேரம் பகல் சாப்பாடு நாம சாப்பிட்டது அங்க தானே??"
"இங்க தானே நாம ரெண்டு பேரும் கால் நனைத்தோம்"
" papa, இங்க தானே மிச்ச நேரம் பைக்க நிப்பாட்டி என் இரண்டுபேரும் பேசிட்டு இருந்தோம்"
" அப்படியா?? தெரியல. எனக்கு நினைவு இல்லையே baby.." என்று பொய் சொல்லி அவனிடம் கதை கேட்க ஆசைப்பட்டாள் ஆஷா.

***********************************

ஆஷா ஊரிற்கு கிளம்ப முன், முதன் முதலாக அவள் கண்டு இரசித்த நீர்வீழ்ச்சியின் முன்னால் இருந்த பாறையில் அமர்ந்தவாறு, தன் விரல்களோடு அஷ்வினின் விரல்களை கோர்த்துக் கொண்டு, வந்த நாளிலிருந்து செல்லும் நாள்வரை தங்களுக்குள் நடந்த அழகிய தருணங்களை நினைவுப்படுத்திக் கொண்டு இருந்தாள். இடை இடையே ஆஷா தன் விரல்களால் அஷ்வினின் கையில் கோலம் போட, அஷ்வின் அவளது விரல்களை எடுத்து சொடக்கு போட்டபடி அவள் சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டு இருந்தான்.

அந்த நேரம்,
அஷ்வினின் கையை அவதானித்தவள்,
"அஷ்வின், இதென்ன இது??" என்று கேட்க,
" சும்ம ரேஷ் போல டி"
" எவ்வளவு காலமா இருக்குது??"
" அதெல்லாம் சரியா தெரியாது டி, ஆனா கொஞ்ச காலம்மா இருக்குது. இதெல்லாம் பெரிய விஷயமா?? நாள் குறித்து வைக்கிறதுக்கு???" என்று விளையாட்டாக பேசிக் கொண்டிருந்தாலும், அவளோ ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.
" உடம்புல வேறு எங்காவது இருக்கா அஷ்வின்?? "
" ஐயோ இல்ல டி. சிலவேள வெயிலுக்கு வரும். இல்லன்னா ஏதாவது சாப்பாடு ஏலார்ஜி ஆகிருக்கும். அதான் டி"
" அஷ்வின், இத டாக்டர் ஒத்தர் கிட்ட நாம காட்டுவோம். எதுக்கும் இத காட்றது நல்லதுன்னு எனக்கு தோனுதுடா. வா நம்ம பக்கத்து ஊர் டாக்டர்கிட்ட நாம காட்டி பார்க்கலாமே"
" ஐயோ, லூசு papa இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல. இதெல்லாம் டாக்டர் கிட்ட காட்றதா?? நா தடிமன் காய்ச்சல் வந்தாலே மருந்து எடுக்க மாட்டேன். நீ வேற " என்று புறக்கணித்தான் அஷ்வின்.
" இல்லடா இத நாம கட்டாயம் டாக்டர்ட காட்டனும். நா சொன்னா என் baby என்ன வேண்டும்னாலும் பண்ணுவ தானே. இதையும் கேளுடா. ஒரே ஒரு தடவ நா சொல்றதுக்காக காட்டுவோம். Please.. Please.. என் தங்க baby ல" என்று வராத கொஞ்சல்களை வாய்க்கு வரவைத்து, கடும் சீரியஸாக கதைக்க,
சரி என்று வேறுவழியின்றி அஷ்வினும் ஆஷாவும் டாக்டரிடம் சென்றனர்.

காதலின் வலிமை (completed) Where stories live. Discover now