இப்படியே, நாட்கள் நகர காவ்யாவும் முதலாண்டு காலேஜ் என்பதால் பிஸியாகி விடவே, அஷ்வின் ஆஷாவின் project க்கு உதவி செய்தான். விடுமுறை தினங்களில் காவ்யாவும் உதவி செய்ய தவறுவதில்லை.முதலில் இருந்ததை விட, ஆஷாவும், அஷ்வினும் நெருக்கமாக பழக தொடங்கினர். இருவருக்கும் தெரியாமலே ஒருவர் மேல் ஒருவருக்கு ஆசைகளும் வளர தொடங்கியன. இப்போதெல்லாம் மரியாதையாக வாங்க, போங்க என்பதை விட வாடா, போடி என்று பேச தொடங்கினர். இதுவரை யாரிடமும் அவர்கள் உரிமையாக இருவரும் டி, டா போட்டு கூட பேசியிருக்கவில்லை.
Project ஐ project ஆக மட்டும் எண்ணாமல், ஆஷாவும் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சந்தோசமாக களித்தாள்.
"அஷ்வின், வரம்புல நடக்க ஆசையா இருக்கு" என்று சொல்லவும்,
"சரி" என்று அவளை முன்னால் அனுப்பி, பின்னால் நடந்தான். அவள் நடக்க தடுமாறும் போது தன் கைகளை கொடுத்து balance செய்தும் விட்டான்.
" கவனமா கீழ பார்த்து போ ஆஷா" என்று சொன்னதும் தாமதம்,
"ஆஆஆஆ" என்று கத்தினாள்.
" ஆஷா, என்னடி??? என்ன நடந்த??" என்று கேட்க,
அவளது பாதங்களில் இரத்தம் வடிந்து கொண்டு இருப்பதை கண்டான்.
உடனே வரம்பு முடிகின்ற கட்டம் தான், சின்ன மழைத்தூறல் வேறு, சுற்று முற்றும் பார்க்க, யாரும் இருக்கவில்லை. ஆஷாவின் அனுமதியை கூட வாங்காமல், அவளை தன் இரு கரங்களாலும் தாங்கிக் கொண்டு, வயல் நடுவில் ஓலையால் பிண்ணிய சிறிய மடுவங்கள் இருக்கும். அதனை நோக்கி சென்று கொண்டு இருந்தான் அஷ்வின்.போகும்வழியில்,
மழைத்துளிகள் பன்னீர்துளிகளாக ஜோடியை ஆசிர்வாதத்தை பொழிந்து கொண்டு இருக்க, தன் சல்வார் துப்பட்டாவை அஷ்வினின் தலைக்கு மேலால் மழையில் நனையாமல் இருக்க பிடித்தாள் பேதை ஆஷா. இருவர் கண்களும் எதையோ பேச,
"டேய், நீயும் கீழ பார்த்துட்டு நட, உன் காலுக்கும் ஏதாவது நடக்காம."
" ஐயோ, அப்படி நடந்தாலும் உன்ன மாதிரி கத்தி அழ மாட்டேன். குனிந்து பார்த்து என்ன இருக்கு என்று பார்த்து வீசிட்டு அப்படியே நடையை கட்டி இருப்பேன். Girls க்கு கொஞ்சம் இருந்தாலும் போதுமே இனி" என்று சொல்ல,
அவனை பார்த்து ஓர் பார்வை முறைத்துவிட்டு,
" சும்மா ஒவ்வொன்னு சொல்லாதே. என்ன கீழ இறக்கிவிடு. நா போரேன்" என்ற அவனது பிடியில் இருந்து எழ முற்பட்டாள் ஆஷா.
" என்னடி, உனக்கு இவ்வளவு ரோசம்?? சும்ம உன்ன குழப்பி பார்த்தேன். இரு பேசாம" என்று சமாதானப்படுத்தினான்.
YOU ARE READING
காதலின் வலிமை (completed)
Romanceகாதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்பார்களா? தோற்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்💕 #1 romantic 10.02.2022, 30.03.2022, 02.04.2022 #2...