கொஞ்ச நேரத்தில் ஆஷாவின் தொலைபேசி அலறவே, விலகிக் கொண்டனர்.
" சொல்லுங்க அண்ணா. நா வந்து கொண்டு இருக்கிறேன்." என்று பொய் சொன்னவள், அழைப்பை துண்டித்துவிட்டு,
" சரி இப்பவே போகலாமே..." என்று இருவரும் ஒரேடியாக சொல்லியபடி கெப்பொன்றை புக் செய்து சென்றனர்.
ஆஷாவின் கையை பிடித்தும், தடவிக் கொடுத்தபடியே அஷ்வினும் செல்ல கெப்பும் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.அடுத்த கணமே, வீடருகே கெப்பும் நிறுத்தவே, மனமின்றி அஷ்வினின் கைச்சிறையில் இருந்த கையை ஆஷா எடுத்து விடைபெற்றாள்.
கேர்ட்டை மெதுவாக திறக்க,
அண்ணனும், அப்பாவும் தோட்டத்தில் கதைத்துக் கொண்டிருந்தனர்.
அப்பாவின் பார்வை ஆஷா வீட்டுக்குள் நுழையும் வரை வீசிக் கொண்டு இருந்தது.
" அப்பா, அவ சந்தோசம் தானே நமக்கு முக்கியம்.. ப்ளீஸ் பா.. கொஞ்சம் யோசித்து முடிவெடுங்க" என்று அவளது காதில் மெல்லியதாய் கேட்டது.
சித்தி ஏதோ பேச, அதுவும் காதில் கேட்காமல் படியேறி அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
அப்பாவும், அண்ணாவும் என்னை பத்தி தான் ஏதோ பேசுறாங்க போல..
என்ன பத்தியும், அஷ்வின் பத்தியுமா?? என்று யோசிக்கையில் அவளது செல்ல பிராணி டொம்மி காலை மெதுவாக தட்டி அவளை பார்த்தது. கொஞ்ச நேரம், டொம்மியோடு விளையாடிவிட்டு, குளியலை முடித்துக் கொண்டு அறைக்கு வர,
அந்த நேரம், கதவும் தட்டப்பட்டது."கொஞ்சம் 5நிமிடங்கள் இருங்க" என்று உடனே பிஜாமை மாட்டிக் கொண்டு தலையை துடைத்தவாறு கதவை திறந்தாள்.
கதவு தட்டியது வேறு யாருமில்ல ரித்திக்." வா அண்ணா, என்ன சொல்லாம கொல்லாம வந்துட்ட???"
" ம்ம்ம். எல்லாம் உன்னால தான். ஈவ்னிங் அவசரமா கோல் பண்ணி அப்பா வர சொன்னாரு."
" என்னது??? ஏன் அண்ணா?? "
" நா அன்னைக்கே உனக்கு அஷ்வின் கூட அங்க இங்க சுத்த வேணான்னு சொல்லி இருந்தேனே. அப்படியிருக்க அத மீறி இன்னைக்கு உன்ன கடல்ல அஷ்வின் கூட இருந்தத அப்பாட ப்ரெண்ட் யாரோ ஃபோட்டோ எடுத்து அப்பாக்கு அனுப்பி இருக்காங்க." என்று சொன்னதும் ஆஷாவிற்கு கை கால் பதறியது. நடுங்கவும் தொடங்கியது.. அவளது தலையில் அந்த முத்த காட்சியே வந்து போனது. ஆனா அத அப்பாக்கு அனுப்பி இருந்தா, அப்பாவும், ரித்திக் அண்ணாவும் என்ன கண்டு சும்ம இருக்க மாட்டாங்க. வந்ததும் கன்னத்தில் பளார் என்று விழுந்திருக்கும். இல்லன்னா கொலை தான்..
" என்ன... சொல்றீ.. ங்.. க அண்ணா?? எ...ன்...ன ஃபோட்டோ??" என்று திக்கி திக்கி கேட்டாள் ஆஷா.
KAMU SEDANG MEMBACA
காதலின் வலிமை (completed)
Romansaகாதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்பார்களா? தோற்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்💕 #1 romantic 10.02.2022, 30.03.2022, 02.04.2022 #2...