அந்த நேரம் கீதாவும் ஏதோ தேவைக்கு காலேஜ்ஜுக்கு நேரத்தோடு வந்து இருந்ததால், இருவரும் சேர்ந்து கன்டினில் பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து, அஸ்வினின் கோலும் வந்தது. "ஆஷா எங்கிருக்க?? நான் இப்ப தான் ஹாஸ்பிடல் கிட்ட வந்துட்டேன்" என்று அஸ்வின் சொல்ல,
"சரி பேபி நான் வருகிறேன். கொஞ்சம் 5 நிமிடம் தாங்களேன்" என்று அழைப்பை துண்டித்தாள்.
கீதாவிடம் சொல்லிவிட்டு ஹாஸ்பிடலை நோக்கி சென்றாள். அஸ்வினை கண்டதும் ஓடிப் போய் கட்டிப்பிடிக்கனும் போல இருந்தது. ஆனால் அண்ணன் சொன்னதெல்லாம் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஆஸ்பிடல்ல காண, மனதுக்கு சற்று பதற்றமாகவே இருந்தது. ஏனென்றால் இது புற்றுநோயிற்கான தனி வைத்தியசாலை ஒன்று. அதுமட்டுமல்லாமல், இன்று தான் அவனது சிகிச்சையின் முதல் நாளும் கூடவே. சிகிச்சைக்குப் பின் அவன் எப்படி இருப்பானோ என்று நினைக்கையில் பேதையின் மனமோ சற்று கவலையில் வாடியது.தலையில் போகும் எண்ணங்களை ஒரு ஓரமாக கட்டியவள்,
"பேபி ஏதும் சாப்பிட்டா வந்தாய்??" என்று அருகில் போய் கேட்க,
"இல்லடா.. குளித்து வர்ர நேரம் காவ்யா கோல். அவள் கூட பேசிட்டு இருந்ததுல நேரம் போய்விட்டது. அதோட டைம் பார்த்து, அவசரத்தில வந்துவிட்டேன்" என்று சொன்னான் தன்னவன்.
"நானும் சாப்பிடல்ல. அப்போ நாங்க ரெண்டு பேரும் போய் சாப்பிடுவோம்" என்று ஆஸ்பத்திரியில் இருந்த சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்து சென்றாள் ஆஷா.
என்றுமில்லாமல் சுற்றும் முற்றும் பார்த்தாள் ஆஷா
யாரும் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று..
"மை டோலி, நா பக்கத்துல இருக்கும் போது நீ யார தேட்றடா?? " என்று அவன் கேட்க,
" இல்ல, சும்ம தான் பேபி" என்று அருகில் இருந்த வைடரிற்கு ஆடரை கொடுத்துவிட்டு, சும்மா அஷ்வினோடு பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தாள்.
" தங்கமே, இன்னைக்கு யார் கூட வந்தடா??" என்று கேட்க,
" அண்ணா கூட"
" யாரு ரித்திக் அண்ணனா?? ஆஸ்பிடலுக்கே வந்ததா?? இந்த ஆஸ்பிடலுக்கு ஏன் எதற்கு வந்தன்னு காரணம் கேட்கல்லையா?? அதான் வந்ததுல இருந்து என் தங்கம் டல்லா இருக்கிறீயா?? ஏதும் பிரச்சினையா?? " என்று ஆயிரம் கேள்விகளை கேட்டான் அஷ்வின்.
" இல்ல பேபி, நா காலேஜ்ஜுக்கு தான் வந்து இறங்கினேன். பேபி... "
" சொல்லுடா. என்ன?? "என்று கேட்டுக் கொண்டே ஆடர் செய்த உணவில் வாயில் போட்டபடி கேட்டான் அஷ்வின்.
" அன்னைக்கு ரித்திக் அண்ணா ஃபோட்டா அனுப்பவும் பதில் ஏதும் சொல்லாம தப்பித்தேன் பேபி. ஆனா இன்னைக்கு காலைல வீட்டுக்கு வந்துட்டாரு. மெதுவாக நழுவ போன நேரம், காலேஜ்ஜுக்கு என்ன கூட்டிட்டு போறேன்னு அண்ணா கூப்பிட்டாரு. அதற்கு மேல அவர்ட இருந்து நழுவ முடியல்ல. கார்ல வர்ர நேரம் அண்ணா உங்கள பத்தி கேட்டாரு. அண்ணாக்கு உங்க முழுப்பெயர், படிக்கிற காலேஜ்ஜுன்னு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அதோட நாங்க பஸ்ல வந்ததும் யாரோ கண்டிருக்காங்க. பேபி நீ அன்னைக்கு கோல் பண்ண நேரம் சித்தார்த் கைல இருக்கும்போது உன் ஃபோட்டாவோட பேபின்னு வந்திருக்கு. இதெல்லாம் நாம லவ் பண்றோம்னு சாட்சியாகி விட்டது. அதற்கு பிறகு நானும் ஒத்துக்கிட்டேன்"
YOU ARE READING
காதலின் வலிமை (completed)
Romanceகாதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்பார்களா? தோற்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்💕 #1 romantic 10.02.2022, 30.03.2022, 02.04.2022 #2...