💓 வலிமை - 14 💓

180 12 5
                                    


வண்டியும் நிறுத்தப்பட்டது. ஆஷா எழுந்து வேகமாக இறங்கப் போகும்போது தடுமாறி விழப்போக, அஷ்வின் அவளை பிடித்து நிறுத்தினான்.
அஷ்வின் முதலில் வீதியில் இறங்கி, தன் கரத்தை கொடுக்கவே, ஆஷா கோபத்தால் முகத்தையும் பார்க்காமல் தன் கரத்தை கொடுத்தாள். மெதுவாக பிடித்து அஷ்வின் ஆஷாவை இறக்கி விட்டான்.

இறங்கி, விறுவிறுவென்று நடக்க தொடங்கினாள்.
"அடி ஆஷா. கொஞ்சம் பாரு டி" என்று அவளின் பின்னால் ஓடினான் அஷ்வின்.
" ஒன்னும் தேவல்ல "
" நீ மட்டும் உன் காலேஜ் பத்தி சொன்னியா?? உன் boy friend, girls friends பத்தி சொன்னீயா?? " என்று அஷ்வின் கையை பிடித்து கேட்க,
" கேட்டா சொல்லிருப்பேன் தானே" என்று அஷ்வினை பார்த்து சொல்லிவிட்டு கையை உதறிவிட்டு சென்றாள். முக்கியமான கேள்விக்கு ஆஷா பதில் சொல்லலையே என்று சற்று கவலையும் அடைந்தாலும் அவளை எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும் என்று பேச்சால் மடக்க முயற்சி செய்தான்.
"என் தங்கச்சி கிட்ட சரி இப்படி கெஞ்சி இல்ல டி, பாரு இவள்கிட்ட... சரி பரவல்ல அவள் என் ஆஷா தானே.." என்று மனம் சொல்லிற்று.
" அடி, ஆஷா, என் bestie தானே. உன் கிட்ட சொல்லாம இருப்பேனா?? உன் project வேலயில busy ஆக இருந்ததால என்ன பத்தி சொல்ல கிடைக்கல. நீயும் இப்ப தானே கேக்குற. இன்னொரு விஷயம், நா உன்கிட்ட பேசுற அளவுக்கு வேறு யார்கிட்டயும் பேசுறதே இல்ல டி " என்று சற்று emotional ஆக பேச, மெதுவாக ஆஷா அஷ்வினை திரும்பி பார்த்தாள். முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு இருந்ததை காண, மனமும் இளகத் தான் செய்தது.
" சரி சரி, இனி போதும். Sentiment ஆ பேசினதெல்லாம். இப்ப சொல்லுங்களே. நா கேக்குறேன்டா"
என்று அருகில் இருந்த ஓடைக் கட்டில் உட்கார்ந்து கொண்டு, அவனது கையை பிடித்து, அவனையும் அமர்த்த செய்தாள்.

" உன்ன மாதிரி நா பெரிய காலேஜ்ல படிக்கல்லடி. நீ போனதும் நா தனியாகின மாதிரி இருந்தது. படிப்படியா படிக்கிற interest உம் என்ன விட்டு பொய்ட்டு. பாடசாலை போறன்றா எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அம்மா, அப்பா வேலைக்கு போய்ருவாங்க. தாத்தாட ஏதாவது சாட்டு சொல்லிட்டு காவ்யா கூட விளையாடிட்டு இருப்பேன்.

காதலின் வலிமை (completed) Opowieści tętniące życiem. Odkryj je teraz