ஆட்டோவும் சொன்ன இடத்தில் நிறுத்தப்பட்டது. நடுவில் பெரிய ஹாட்டலொன்று, அங்காங்கே சிறிய cottage கள் சுற்றி காணப்பட்டன. ஓலையால் வேயப்பட்ட cottage கூரைகளும், செங்கற்கள் போன்ற tiles களால் செதுக்கப்பட்ட சுவர்களும், சின்ன ஒரிரு யன்னல்களும், welcome என்று எழுதப்பட்ட பதாகையொன்றும் கதவில் தொங்க விடப்பட்டிருந்தது. ஒவ்வொரு Cottage களுக்கும் இடையில் தனித்தனி பாதைகள். அந்த பாதை இருமருங்குகளும் ரோஜா, அலரி, மல்லிகை, ஓகிட் போன்ற பூக்கள் பூத்து அவர்களை பார்த்து தலையாட்ட, அந்த மாலை நேரம் குளிர் காற்றும் அவர்களது வருகையை வருக வருக என்று ஹாட்டலின் உள்ளே போக சொல்லிற்று. மூவரும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருக்க, அஷ்வினின் யோசனைகளும் பறந்து போனது. அன்று தான் அஷ்வினும் இப்படி ஒரு resort யை கண்டிருக்கிறான். மாறன் பெரிதாக சுற்றுப்புறத்தை பார்த்து ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால் மாறனின் நண்பன்ட சித்தப்பாவின் tourist resort தான் அது. ஓரிரு நாட்கள் விடுமுறை கிடைத்தாலும் உடனே நண்பனோடு வந்தும் போகும் இடமல்லவா இது.
" welcome to our bright star resort " என்று bouquet கள் மூன்றை கொண்டு வந்து கொடுத்து, உள்ளே அழைத்து சென்றார் வரவேற்பாளர். எல்லாம் சுதாவிற்காக தான் ஏற்பாடு செய்து இருக்கான் என்று ஆஷா சுதாவை பார்த்து கண்ணடிக்க, நாணத்துடன் மெல்லியதாய் சிரித்தாள் சுதா.ஹாலில் உட்கார சொல்ல, நால்வரும் அமர்ந்த வண்ணம், சுவரில் வரையப்பட்டிருந்த சித்திரங்கள், சிற்பங்கள் என்பவற்றை பார்த்து இரசித்துக் கொண்டு இருந்தனர். அந்த நேரம் குளிர்பானங்கள் அழகிய glass களில் ஊற்றி கையை நீட்டிக் கொண்டு இருந்தனர் வேறொரு வரவேற்பாளர். குடிக்கும்போது நண்பனின் சித்தப்பாவும் வந்து கை குழுக்கி அறிமுகமாகிக் கொண்டார். சுக செய்திகளை சற்று பரிமாறிவிட்டு ஹாட்டலை சுற்றியும் காட்டினார்.
ஹாட்டலின் சமையலறை பெரிதாகவும், நேர்த்தியாகவும் இருந்தது. அதில் பல இளைஞர்கள் சமைத்துக் கொண்டு இருந்தனர். பின்புறத்தில் சின்னதாக ஒரு swimming pool, அதை சுற்றி சாய் கதிரைகள், அழகிய சின்ன dancing club ஒன்று, ஹாட்டலின் நடுவில் நிலாமுற்றம் என்று பலவகையான வசதிகளோடு பெரிய அறைகள், ஒரிரு அறைகளில் அந்த ஊரின் பிண்ணனி, ஹாட்டலின் வரலாறு படங்களோடு எழுதப்பட்டிருந்தது.
"சரி பிள்ளைகளா, மெட்ராஸ்ல இருந்து வந்தது ரொம்ப களைப்பா இருக்கும். இந்தாங்க room keys 200, 201. Enjoy your holidays " என்று சொல்லிவிட்டு அவரும் செல்ல,
ஆஷாவின் அருகே வந்தான் அஷ்வின்.
" my dolly, நம்ம ரூம் நம்பர் எது டி??" என்று அவளை மெல்லியதாய் கிள்ளியபடி கேட்க,
" என்னடா, ரொம்ப தான் உனக்கு ஆசயே. நாங்க ஹனிமூன் வர்லடா. சின்ன tour தான் வந்திருக்குறோம். Sorry தங்கம்ஸ், 200 ரூம்ல நானும், சுதாவும், 201 ரூம்ல நீங்களும், மாறனும் " என்று சொன்னாள் ஆஷா.
" என்ன dolly சொல்ற??" கவலையாக முகத்தை வைத்துக் கொள்ள,
" என்ன boss, இங்க வந்ததும் papa ன்னு சொல்லாம, dolly ன்டெல்லாம் சொல்ற, my baby நல்ல மூட்ல இருக்க போல " என்று கண்ணடித்துவிட்டு பேசியபடியே நடந்து சென்றனர். ஆஷாவின் Cottage க்கு முன்னால் அவளை சுதாவிடம் விட்டுவிட்டு,
கையசைத்தான் அஷ்வின் அந்த சிறிய கணத்தின் பிரிவுக்கும் கூடவே.
YOU ARE READING
காதலின் வலிமை (completed)
Romanceகாதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்பார்களா? தோற்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்💕 #1 romantic 10.02.2022, 30.03.2022, 02.04.2022 #2...