"பேபி...." என்று ஆஷா சொல்லிவிட்டு தன்னவனிடம் இன்று நடந்ததை சொல்வதா?? இல்லையா?? என்ன பண்ணலாம்?? என்று யோசித்துக் கொண்டு மீண்டும் அவனை அழைத்தாள்.
ஆனால் மறுமுனையில் எந்த சத்தமும் இல்லை.
அஷ்வின் தன்னோடு பேசும்போது கொட்டாவி விட்டுவிட்டு தானே பேசினான். தூங்கிவிட்டான் போல என் தங்கம் என்று அழைப்பை துண்டித்துவிட்டு,
ஸ்டேடஸ் ஒப்ஷனில்
மை பேபி என்று இருந்தது.அந்த ஸ்டேடஸை ஓபன் செய்து,
பார்க்க,பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வாஇருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண் மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவாஉனக்கென மட்டும் வாழும் இதயம் அடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமை அடிஎன்ற பாடல் வரிகளோடு அழகிய ஒரு ஜோடியின் வீடியோவுடன் சென்றது. இதனை கண்ட ஆஷாவின் மனமும் மயக்கத்தில் மிதக்க தொடங்கியது.
சற்று நேரத்தில், மயக்கம் தெளிந்து,
தூக்கமும் போகாமல் வயிற்றை பசியானது கிள்ளிக் கொண்டிருந்தது.
ஆஷா நேரத்தை பார்க்க அதுவோ 12 மணியைக் காட்டியது.
இந்த நேரம் என்ன சாப்பிட இருக்கும்?? என்று அறை முழுவதும் வலைவீசித் தேடி பார்த்தாள். அவளது கெட்ட நேரத்திற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு பிஸ்கட் பக்கெற்றாவது. அப்போ கீழே படி இறங்கி சமையலறை போக வேணுமே என்று சோம்பல் வந்தாலும், பசிக்கு வேற என்ன பண்றது.. போய் தானே ஆக வேண்டுமே என்று அளுத்துக் கொண்டே சமையலறையை நோக்கி சென்றாள். பாண் மேசையில் கிடக்க அதற்கு அருகில் ஜேம் போத்தலும் இருந்தது. ப்ரீஜில் இருந்த பட்டரையும் எடுத்து பூசிக் கொண்டு வாயில் ஒரு துண்டை போட்டுக் கொண்டு செல்லும் வழியில் அந்த நேரம் அப்பாவின் அறையின் ஒளிவிளக்கு இன்னும் அணைக்கப்படாமல் இருந்தது.
இருவரில் யாருக்காவது சுகமில்லையோ என்று பயந்து கதவை தட்ட முற்பட, அவர்கள் ஏதோ பேசிக் கொண்டு இருப்பது காதில் கேட்டது.
"என்ட மகன் ரித்திக், இந்த விஷயம் இப்போதைக்கு வேணான்னு சொல்றான். ஆஷாட படிப்பு இன்னும் முடியல்ல. இன்னும் ரெண்டு மாசத்துல தான் முடியுமாம். என் நண்பன் என்ற பலிக்கு அவள்ள கல்யாணம் பண்ணிக் கொடுக்காதீங்க என்று சொன்னான்" என்று அப்பா சொல்ல,
"அதுவும் சரிதாங்க. எங்க இருந்து வந்தாங்களோ. தீடீரென வந்து விருப்பம் சொல்றன்னா கொஞ்சம் யோசிக்க வேணும் தான். நமக்கு இருக்கிறது ஒரே ஒரு பொன்னு. அவள்ள சும்ம கண்டவனுக்கெல்லாம் திருமணம் செய்து கொடுக்க முடியாதுல்ல. வாழ போறது அவ தானே.. அவ கிட்ட சம்மதம் சொல்லனும். " என்று சித்தி சொல்ல, சற்றே வியந்தாள் ஆஷா. சித்தி தனக்காக பேசுறாவே.. என்னோட உண்மையாவே பாசம் தானா?? நா தான் அவவ தப்பா புரிந்து கொண்டு இருக்கேனா? என்று பல யோசனைகள் தலையில் செல்ல,
" என்னத்தான் இருந்தாலும் என் அம்மாவ நம்ப வைத்து துரோகம் பண்ணி, என் அப்பாவ திருமணம் முடித்தாங்க தானே.." என்று மனம் சொல்ல, அங்கிருந்து விரைந்தாள் ஆஷா.
"அப்போ சீனிவாசன் கிட்ட சொல்றேன்" என்றார் ஆஷாவின் தந்தை.
இருவரது பேச்சை கேட்ட நிம்மதியோடு கண் மூடிக் கொண்டாள் ஆஷா.
CZYTASZ
காதலின் வலிமை (completed)
Romansகாதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்பார்களா? தோற்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்💕 #1 romantic 10.02.2022, 30.03.2022, 02.04.2022 #2...