அந்தப் பக்கம் ஐஸ்கிரீம் வண்டி செல்ல, ஆஷா அவளை அறியாமலே திரும்பினாள். அதனை கண்ட அஷ்வின் அந்த வண்டியை நிறுத்தி, அவளிடம் என்ன ப்ளேவர் வேணும்னு கேட்க, ஆஷாவை பார்க்க அவளோ விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
" அங்கிள், இருக்கிற நாலு ப்ளேவர்லயும் ஒவ்வொரு ஐஸ்கிரீம் தாங்களே..." என்று காசை கொடுத்து,
அவளோடு பந்து விளையாட போன சிறுவனை நிறுத்தி,
" அந்த பச்சை நிற சுடிதார் அணிந்திருக்கிற அக்காக்கு இத கொண்டு போய் கொடுக்க முடியுமா?? வேணும்னா நானும் உங்க கூட விளையாட வர்ரேன்..இல்லன்னா ஏதாவது வாங்கி கேட்ட கூட வாங்கி தர்ரேன்" என்று சொன்னான் அஷ்வின்.ஆஷாவின் அருகே சென்ற அந்த பையன், " ஐஸ்கீரிம் வண்டி கிட்ட இருக்கிற அண்ணா, உங்களுக்கு இத கொடுக்க சொன்னாரு.. " என்று சொன்னபடி அவளுக்கு பிடித்தமான சாக்லெட் ப்ளேவரான ஐஸ்கீரீமை நீட்டினான்.
" எந்த அண்ணா??? " என்று நீட்டிக் கொண்டு இருந்த ஐஸ்கிரீமை வாங்குவதா?? இல்லையா?? என்று இரண்டு மனதோடு யோசித்துக் கொண்டிருந்தாள் ஆஷா." அங்க வராரே அந்த அண்ணா தான்" என்று டெனீம் சேர்ட் அணிந்திருந்த அஷ்வினை கண்டு உடனே வாங்கிக் கொண்டாள். அவனது கையில் போதாதைக்கு மூன்று ஐஸ்கிரீம் வேற..
வெனிலா, ஸ்டோபரி, ப்ருட் என் னட்.
அவளும் அந்த பையனிடம் இருந்து வாங்கிக் கொள்ள, அஷ்வினும் அவளருகே வந்தான்.
" பேபி, எல்லாத்தையும் எப்படி கைல வைத்து சாப்பிட்றது???" என்று முகத்தை கவலையாக வைத்து கேட்க,
"நா இரண்ட என் கைல வைத்து கொள்றேன். மாறி மாறி சாப்பிடேன் தங்கமே " என்றான் அஷ்வின் சற்று குறும்போடு.அந்த சிறுவனிடம், "என்ன வேணும் தம்பி??" என்று அஷ்வின் வினவ,
"அண்ணா, என் கூட விளையாட வந்தா போதும்" என்று சொன்னான். கொஞ்சம் அந்த பையனை நிற்க சொல்லிவிட்டு,
தன்னுடைய கைகளில் இரண்டு ஐஸ்கீரிமை வைத்துக் கொண்டு ஆஷாவை உண்ண வைத்தான்.அவளும் மாறிமாறி நான்கு ஐஸ்கிரீமை சுவைத்துக் கொண்டு இருந்தாள். அடிக்கடி, அவளது மூக்கின் மேலும், கன்ன ஓரங்களில் வேண்டுமென்றே ஐஸ்கிரீமை தேய்த்தும் விட்டான்.
" ஏன்டா, நீ சாப்பிடல்ல.."
என்று ஆஷா அஷ்வினிடம் கேட்க,
" உண்மையாவே கொஞ்சம் தலைவலி டி. அது ஒருவேள கூடிரும்னு பயம்.."
" சரிடா வீட்டுக்கு போய் சாப்பிட்டு தூங்க முன்னம் மாத்திர போட்டுக் கோ.. சரியாகிடும்" என்றாள்.
அவள் சாப்பிடும்வரை பார்த்துக் கொண்டே இருந்தான் அஷ்வின்.
கண்ணை மூக்கை பிரட்டிக் கொண்டு சுவைத்து உண்ணும் அந்த அழகையும், உதட்டிலிருந்து வடியும் ஐஸ்கீரீமை தன் கைக்குட்டையால் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தான் அஷ்வினும்.
CZYTASZ
காதலின் வலிமை (completed)
Romansகாதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்பார்களா? தோற்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்💕 #1 romantic 10.02.2022, 30.03.2022, 02.04.2022 #2...