💓 வலிமை - 29 💓

108 12 5
                                    


கீதாவோடு சண்டையிட்டு அவளை ஒருவாறு எழுப்பிவிட்டு, குளியலறைக்குள் புகுந்தாள் ஆஷா. குளித்துவிட்டு அந்த ஐயன் செய்த சுடிதாரை அணிந்து, கண்ணாடியில் ஆயிரம் தடவை அழகு பார்த்தாள். நெற்றியின் நடுவில் சுடிதாருக்கு பொருத்தமான மெல்லிய சின்ன பொட்டொன்றை வைத்தாள். முடியை முதலில் ஹெயார் ரையரில் காய்த்துவிட்டு, இரண்டு ஓரத்தால் கொஞ்சம் முடியை எடுத்து பின்னி முன்னால் போட்டுக் கொண்டாள். அலுமாரியில் இருந்த ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு செல்ல ரெடியாகும்போது பசி வயிற்றைக் கிள்ளியது. சமையலறையில் ஏதாவது இருக்கா?? என்று எட்டிப் பார்த்தாள். சித்தி சப்பாத்தி செய்து இருந்ததை கண்டு, அதை அவசரமாக எடுத்து ஆனத்தை ஊற்றி சாப்பிட்டு, கடிகாரத்தை பார்க்க அதுவோ எட்டு மணியை காட்டியது.

"இது சரியான நேரம்" என்று கீதாவிற்கு கால் செய்து அவள் எழும்பி இருக்கிறாள் என்று உறுதி செய்து கொண்டாள். அஷ்வினின் நினைவு வரவே,
"அஷ்வின், பாவம் கொஞ்சம் தூங்கட்டும்" என்று மெதுவாகவே கோல் செய்யலாம் என்று பேசாமல் விட்டு விட்டாள்.  தங்களுடைய கார் டிரைவருடன் சென்று கீதாவை வீட்டை அடைந்தாள் ஆஷா. பிறகு அவளையும் கூட்டிக்கொண்டு எட்டரை மணிக்கு பஸ் தரிப்பிடத்தை அடைந்தனர். அஷ்வினின் அம்மாவுக்கு கோல் செய்து,
" ஆன்ட்டி, எங்க இருக்கீங்க?? நா பஸ் ஸ்டான்ட்ல தான் இருக்கின்றேன்" என்று சொல்லிவிட்டு பதிலை கேட்டுவிட்டு, அழைப்பை துண்டித்தாள்.

"அடி கீதா? வெயில் இவ்வளவு காரமா அடிக்குது. நா கறுத்துவிடுவேனோ தெரியல்ல.." என்று ஆஷா கவலைப்பட,
"அடியேய், இது உனக்கே நியாயமா?? காலேஜ்ல நடக்குற விளையாட்டுப் போட்டிகள்ள எல்லாம் கலந்து கொள்வ. அப்போ கறுக்காத நீங்க தான், இப்போ 5நிமிஷத்துல இங்க இருந்து கறுக்க போறீங்களோ... என்ட கலரெல்லாம் நீ ஆகமாட்டா. எப்பவும் போல துயில் வெள்ளையா தான் இருக்கடி" என்று சொன்னாள் ஆஷா.

அடிக்கடி ஆஷா கேமராவை தட்டி ஓரிரு தடவை தன்னையே பார்த்துக் கொண்டாள். அப்படியே, அவர்கள் எதிர்பார்த்த பஸ்ஸும் வந்தது.
ஆஷாவின் இதயம் திக்திக்கென்று அடிக்க தொடங்கியது.
பஸ் நிறுத்தப்பட்டு, பயணிகள் இறங்கினர்.
அஷ்வின் அன்னைக்கு ஒரு நாள்  அம்மா அப்பா என்று காட்டிய புகைப்படம் கண்ணுக்குள் வரவே, இறங்கிய அந்த ஓரளவு வயதான பெண்மணியையும், அவரோட வந்தவரை அதாவது அஷ்வினின் அம்மா-அப்பா என்று இனங்கண்டு, அவர்களை நோக்கி சென்றாள் ஆஷா. "ஹலோ ஆன்ட்டி, நான் தான் ஆஷா" என்று சொன்னதும் ஆஷாவை மேலும் கீழும் பார்த்தனர் அஷ்வினது அம்மாவும் அப்பாவும்.
ஆஷா என்றால் ஏதோ நடுத்தர வயது உடைய பெண் என்று தான் கற்பனை செய்து வைத்திருந்தனர்.

காதலின் வலிமை (completed) Where stories live. Discover now