💓 வலிமை - 13 💓

193 12 9
                                    


" இப்ப சொல்லுடா அஷ்வின். என்னமோ சொல்ல வந்தீயேடா"
" ஆஷா, அதெல்லாம் விடு. நானும் வந்த நாள்ள இருந்து பார்த்துட்டே இருக்கேன். அப்பா call பண்ணா பேச மாட்டேங்குற. சிலவேள cut பண்ற, இல்லன்னா தானா cut ஆக விட்ற. பேசினாலும் ஓரிரு நிமிஷம் தான். ஏன்டி?? என்னடி பிரச்சினை உனக்கு??" என்று ஆஷாவை பார்த்து அஷ்வின் வினவ,
".... "
அவளோ மௌனமாக இருப்பதை கண்டு,
" sorry டி, ஏதோ உரிமைல கேட்டுட்டேன். உனக்கு இஷ்டமில்லன்னா சொல்லாதேடி. Case இல்ல" என்று அவளை பார்த்து புன்னகைத்தபடி சொன்னான் அஷ்வின்.
"டேய் அப்படி சொல்லாதேடா. அது ஒரு பெரிய கத. உன்கிட்ட சொல்லாம வேற யார்ட சொல்வேன்?? " என்று கதையை கூற ஆரம்பித்தாள் ஆஷா.

நாங்க இந்த ஊர விட்டு போனதும் கொஞ்ச நாள் சந்தோசமா அங்க இங்கன்னு சுத்த போனோம். அதற்கு அப்புறம் தான் நம்மலயும் மத்த பிள்ளைகள் மாதிரி நல்ல பிரசித்தி பெற்ற private ஸ்கூல்ல போட அப்பா ரொம்ப தடமாறினாரு. அப்பாவும் அவர்ட friend கதிர் uncle உம் சேர்ந்து partnership போட்டு தான் கம்பெனி செஞ்சிட்டு இருந்தாங்க. அப்பாக்கு தெரியாம நிறைய காசெல்லாம் தேவல்லாம செலவழிச்சத அப்பாக்கு தெரிஞ்சு அந்த partnership ல இருந்து விலகிட்டாரு. கொஞ்ச நாள்ள அப்பா வேல இல்லாமயும் இருந்தாரு. Private school, term fee பத்தி உனக்கு தெரியுமே அஷ்வின், அம்மாட நகைய வித்து அப்படி இப்படின்னு கட்டினாரு, ஒழுங்கான வேல கிடக்க காட்டி, சின்ன சின்ன வேலைகள் செய்து அப்பா எங்க குடும்பத்த பாத்துக்கிட்டாரு.

அப்படியே 4 5 வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டோம், தனியா இருந்த அம்மாக்கு யோசனையில சுகர், பிரஷர் எல்லாம் தீடீரென்று கூட்ற, குறைற. அதற்கும் வைத்தியம் செஞ்சிட்டு இருக்க, ஒரு நாள் இரண்டும் சேர்ந்து பாரிசவாதத்துல வந்து முடிந்த. பிறகு வைத்தியசாலைல கொஞ்ச நாள் வைத்திருந்து வீட்டுக்கு கூட்டிட்டி வந்துட்டோம். அம்மாட வலதுபக்கம் வேல செய்யாம இருந்த. நாங்களும் சின்னப்புள்ளைக, school போகனும், அப்பா வேலைக்கு போகனும். அம்மாட வேலய யாரு செய்றன்னு யோசிக்க கிட்ட தான், எங்க வீட்டுல இருந்து 4 5 வீடு தள்ளி ஒரு aunty இருந்தாங்க. நாங்க வந்த புதுசுல அவங்க வந்து நெறைய help பண்ணாங்க, பார்த்தா அவங்க இந்த ஊர் தான் அஷ்வின், என் அப்பாட தூரத்து சொந்தம். எங்க சரி தூர பயணம் போறன்னா எங்கள அந்த வீட்டுல தான் விட்டுட்டு போவாங்க. அவங்க கல்யாணம் பண்ணி பிள்ளைகள் இல்ல, அதனால எங்க கூட ரொம்ப பாசம். போன ஏதாவது சமைத்து தருவாங்க, நம்ம கூட சேந்து விளையாடுவாங்க. படிக்க சொல்லி தருவாங்க. அவங்களும் தனியா தான் அந்த வீட்டுல இருந்தாங்க. கணவர் divorce செய்து நான்கைந்து வருஷமாம். கூலி வேல ஏதும் செய்துட்டு அவ பாட்டுல இருந்தா. அதோட எங்க அம்மாவ பார்த்துக் கொள்ளவா?? ன்னு அவங்க எங்க அப்பா கிட்ட கேக்க, அவரும் ஓம் பட்டாரு. இந்த அவசரத்துக்கு வேலைக்கு ஆள் தேட முடியாதுன்னு.

காதலின் வலிமை (completed) Où les histoires vivent. Découvrez maintenant