💓 வலிமை - 10 💓

280 14 6
                                    


கொஞ்ச நேரம் அஷ்வினோடு பேசி சிரிக்க வைத்து,
"சரி baby, நா போய் வர்ரேன்" என்று அவனது மேனியில் இருந்து விலக,
" ஏன் papa, இன்னம் கொஞ்ச நேரம் இரியேன்"
" இல்லடா, அண்ணா வீட்டுல இருக்காரு. கொஞ்சம் என் மேல கண் வைச்சு இருக்காரு நா எங்க போரேன், வாரேன்னு, அவர் கிட்ட மாட்டினா செத்த கத டா. நாளைக்கு வர்ரேன். Okay ஆ??? "
" அதுவும் அப்படியா?? சரிடி, கவனமா போய் வா. Gonna Miss you"
" okay baby " என்று அவனது கன்னத்தை கிள்ளி, முத்தமிட,
மற்றைய பக்கமும் அஷ்வின் காட்டினான் சின்னப்பிள்ளைத்தனமாக. சிரித்தபடி ஆஷா முத்தமிட்டு,
" நைட் மருந்த குடிக்கனும். நீ என் தங்க பிள்ளையே" என்று மூக்கை ஆட்டிவிட்டு,
கையசைத்துவிட்டு வைத்தியசாலையில் இருந்து வெளியேறினாள் ஆஷா.

பாதையில் சென்று கொண்டிருந்த taxi யை ஆஷா கை காட்டி நிறுத்தி,
வீட்டு முகவரியை சொல்ல, அதுவும் பறந்தது.
அஷ்வினோடு இருந்த அந்த அழகிய நிமிடங்களை மீண்டும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்த வேளை,
அவளது தொலைபேசி அலறியது.
" சொல்லுங்க அண்ணா"
" எங்க இருக்க ஆஷா??"
"நா வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கேன்"
" சரிடா, கவனமா போ, நானும் அவசரமாக வீட்டுக்கு போறேன் அண்ணி கூட. 1மாதம் வெளியூர் tour ஒன்னு வந்துவிட்டது. அதற்கு கட்டாயம் நானே போகனும். டுவர் முடிஞ்சி வந்து உன்னோடு பேசுறேன்."
என்று சொன்னதும் தாமதம் ஆஷாவிற்கு உயிரே வந்தது. ஒரு மாதத்திற்குள் எல்லாம் நல்லபடியா முடிந்துவிட வேண்டும். அஷ்வின் பற்றி என் குடும்பத்தினரிடம் சொல்ல நீ தான் வழி காட்டனும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள் ஆஷா.

வீட்டை வந்து சேர்ந்த ஆஷாவிற்கு, அண்ணனின் பிள்ளைகளால் வீடே கலகலவென்று இருந்தது ஆனா இன்று ஏதோ மயான அமைதியை தந்தது. Hall இல் அப்பா டீவி பார்த்துக் கொண்டு இருக்க, சமயலறையில் சித்தி வேலையாக இருந்தார். ஓர் பார்வை பார்த்து விட்டு, அறைக்குள் புகுந்து கொண்டாள். அவளது செல்ல நாய்க்குட்டி tommy அவளை கண்டு இவள் மேலே பாய, செல்லமாக அணைத்துக் கொண்டு அதை கொஞ்சிக் கொண்டு இருந்தாள். சற்றே களைப்பு போக, wash ஒன்றை எடுத்துக் கொள்ள, பசி வயிற்றை கிள்ளியது. சப்பாத்தி இருந்தா நல்லா இருக்குமே என்று ஆசையோட போன அவளுக்கு, ஆஷாவிற்கு பிடிக்காத உணவு நூடுல்ஸ் பார்த்து ஏளனமாய் சிரித்தது.

காதலின் வலிமை (completed) Tempat cerita menjadi hidup. Temukan sekarang