💓 வலிமை - 37 💓

105 9 17
                                    


கொஞ்ச நேரத்தில் ஆஷா பேசும்போது தான் கும்பிட்டுக் கொண்டிருந்த காவ்யா கண்களை திறந்தாள். இரு கன்னங்களிலும் வற்றிக் கொண்டிருக்கின்ற கண்ணீர் துளிகளை கண்டாள் ஆஷா.
காவ்யா தன் அண்ணன் கூட கொண்டு இருந்த பாசத்தையும், இதனால தான் அஷ்வின் கூட காவ்யா மேல உயிரே வைத்திருக்கிறான்.. இந்த பாசம் எப்பவும் இதே மாறி இருக்கனும், என்னால கூட ஏதும் கெடுதி வந்துரப்படாது என்று மனதால் நினைத்துக் கொண்டாள் ஆஷா.
"போகலாமா காவ்யா??" என்று ஆஷா கேட்க,
"சரி" என்று அவள் சொல்ல வீதியில் போய் கொண்டு இருந்த டாக்ஸியை நிறுத்தி , இருவரும் ஏறினர்.
அம்மா அனுப்பிய லொகேஷனில் இருந்த பெரிய சாப்பிங்மாலை நினைவுக்கு வரவே, வீடும் கிட்டவே அண்ணி என்று அவளும் கேட்க, ஆஷாவும் ஆம் என்று தலை ஆட்டினாள்.

" காவ்யா, நா சொன்னதெல்லாம் நினைவு இருக்கே..??? மிகவும் முக்கியம் அண்ணன கண்டதும் கவலைல்ல அழுதுராதே.." என்று அவளது கையை தொட்டு ஆஷா சொன்னாள். காவ்யா சரி என்று தலை ஆட்டினாலும், அவளுக்கு அவளையே நம்பிக்கை இல்லை.. அந்த கறுப்பு கேர்ட் என்று ஆஷா சொல்லி டாக்ஸியை நிறுத்த சொன்னாள். காவ்யாவின் பைகளையும் எடுத்துக் கொண்டு காலிங்பெல்லை அழுத்த, அஷ்வினின் தாய் தான் கதவை திறந்தார்.

" வாம்மா.. என்னங்க காவ்யா வந்திருக்கா.. " என்றதும் அஷ்வினின் தந்தை வந்தார்.
வந்ததும் வராததுமாக, "அண்ணா எங்க??"
"அவன் ரூம்ல.." என்றதும், உடனே அறையை கேட்டு விரைந்தாள் காவ்யா. பின்னால் சென்ற ஆஷா மெதுவாக அஷ்வினின் தந்தையிடமும் தாயிடமும்,
" காவ்யா கிட்ட சொல்லிட்டேன் ஆன்ட்டி. சீ இஸ் ஆல் ரைட்" என்று சொல்லவும் தான் அவ்வளவு நேரம் இறுகியிருந்த முகங்கள் மலர்ந்தன.

" அண்ணா... " என்று சொல்ல,
அவனும் காவ்யாவை நோக்கினான். இருவரது கண்களும் கலங்கி இருந்தன.
" காவ்யா, அண்ணா கிட்ட ஏன் மெலிந்து இருக்க?? ஏன் முடிய மொட்ட மாதிரி வெட்டி இருக்க?? " இப்படி ஏதாவது கேட்டிராதே அவன் அப்செட் ஆகிருவான்.. என்று ஆஷா கோவிலில் சொன்னது காதில் கேட்டது.
வீரமான தன் அண்ணன் கட்டிலில் இருந்து தன்னை பார்ப்பது அவளுக்கு என்னவோ போல இருந்தது. என்ன வேல ஏவினாலும் உடனே ஓடிச் செல்வான், ஏன் சிலவேளைகள்ள ஏதாவது செய்வதற்கு வெளியே இருந்து வந்த அண்ணனை சற்று உட்காரும் போது சொன்னாலும் உடனே செல்வான்.. ஆனால் இன்று...
அண்ணன் பொதுவாக முடி வளர்ப்பது இல்ல. ஆனாலும் சிலவேள ஏதாவது பிஸியா இருக்கும் போது, எக்ஸாம் காலத்துல முடி வெட்டாம இருக்கிற நேரத்துல ஏதாவது ஹெயார் ஸ்டைல் போட்டு விளையாடுவதும் நினைவுக்கு வந்தது. இப்படி அண்ணனை பார்க்க பழைய நினைவுகள் வரவே, மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, ஓடிச் சென்று அஷ்வினை கட்டியணைத்தாள்.

காதலின் வலிமை (completed) Donde viven las historias. Descúbrelo ahora