"ஆஷா, ஒன்னும் ஆகல்லையே.."
" பேபி, உனக்கு ஏதும் இல்லையே.." என்று மாறி மாறி கேட்டுக் கொண்டனர் அஷ்வினும் ஆஷாவும். அஷ்வின் பதறியபடி அவளது முகத்தை தாங்கியபடி கண்கலங்கியபடி கேட்டான்.
"நா எவ்வளவு பயந்தேன் தெரியுமா?? ஏன் பைத்தியமா ஆஷா???" என்று கண்களில் காதலோடு கேட்க,
" நீ ஏன் பயப்புடனும்? நா உங்க யாரு?? ஆம் அஷ்வின் எனக்கு பைத்தியம் தான்.. உன் மேல்ல..." என்று சொல்லும்போது,
" என்ன புள்ள தற்கொலையா பண்ண போன???"
" செவிடா புள்ள?? அவ்வளவு கத்தியும் காது கேக்கல்ல??" என்று சுற்றிவர இருந்தவர்கள் ஒவ்வொன்று கேட்க,
" சாரி..." என்று அஷ்வின் ஆஷாவை பக்கமாக அணைத்துக் கொண்டு அருகில் இருந்த ரெஸ்டூரண்டிற்கு அழைத்து சென்றான்.மண் பட்டிருந்த அவளது சுடிதாரையும் தட்டிவிட்டு, எங்காவது காயங்கள், உராய்வுகள் இருக்கிறதா?? என்று ஆராய்ந்தான் அஷ்வின்.
"ஒன்னுமில்லையே..எங்காவது வலி, எங்காவது பட்டிருந்தால் சொல்லுடா. டாக்டர் கிட்ட போகலாம்" என்று அஷ்வின் அழைக்க,
" ஒன்னும் தேவல்ல அஷ்வின். என்ட மனசு தான் வலிக்குது.. அதுக்கு டாக்டர் கிட்ட போனா மருந்து கிடைக்குமா?? அஷ்வின், ஏன் என்ன காப்பத்தின?? லொறிக்கு அடிப்பட்டு சாக விட்டிருக்கலாமே" என்று புலம்பினாள் ஆஷா." எப்படி ஆஷா, உன்ன என்ட முன்னால சாகவிட ஏழும்?? அத நினைத்து தான் பார்க்க இயலுமா?? ஏன்டா நா உன்ன உசுரா லவ் பண்ணவன்டி.. நா கென்சர் வந்து இறக்க போன என்னையும் காப்பாத்தினது நீ தானே... " என்று கண்கலங்க சொன்னான் அஷ்வின்.
" அஷ்வின், அதெல்லாம் விட்டுட்டு உண்மைய சொல்லு. ஏன்டா என்ன எவொன்ட் பண்ற மாதிரி நடிக்கிற..? சும்ம வீணா வம்புக்கெல்லாம் வர்ர. என்ன தான் உன்ட பிரச்சின?? உண்மையாவே என்னை உனக்கு அளுத்துவுட்டதா?? இல்ல வேறு யாரும் நமக்கிடைல்ல வந்து, என்ன விலத்திட்டு அவ கூட சேரனும்னு ஏதாவது இருக்கா?? அப்படி இருந்தாலும் சொல்லிரு. நா போய்ரேன். ஆனா இவ்வளவு காலம் உன்கூட இருந்த அழகிய நினைவுகளோட.."
" பைத்தியமா ஆஷா, எனக்கு அப்படி யாருமில்ல, இனி வர போனதுமில்ல.. வரவும் விடமாட்டேன். உன்ன எப்படிடி
எனக்கு அளுத்துப்போகும்?? நீ என் வாழ்க்கைல்ல சில வேள அப்பாவா என்ட செலவ தாங்கின, அம்மாவ என்கூடவே இருந்து என்ன ஒழுங்கா பார்த்துக்கொள்ற, என் தோழிய என் கூட சண்ட போட்ற. என் பொண்டாட்டியா " என்று அவனை அறியாமலே சொல்லி விட்டு, விழுங்கிக் கொண்டான்.
YOU ARE READING
காதலின் வலிமை (completed)
Romanceகாதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்பார்களா? தோற்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்💕 #1 romantic 10.02.2022, 30.03.2022, 02.04.2022 #2...