💓 வலிமை - 44 💓

125 10 25
                                    

அறைக்குள் புகுந்த ரித்திக்கு கட்டிலில் புரண்டாலும் தூக்கமே போகவில்லை..
யூடூயுப்பாவது தூக்கம் வரும்வரை பார்ப்போம் என்று தொலைபேசியை தட்டினான்.

என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண்ணிரெண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே

குலம் என்று சொன்னால் நீ தானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வலியின் மருந்தும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே

தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம்


ஆனால் என்னவோ அன்று,
எல்லாம் அண்ணன் - தங்கை பாடல்களே நிறைந்து இருந்தன.

நிழலென நான் என்றும் இருப்பேனே
ஆடி எடுத்து நீ போக
குடை பிடித்தே கூரை கொடுப்பேனே
நெடுமலையில் காப்பாத்த

தங்கை திருமுகம் நெஞ்சில் நிறைகிறதே
தும்பை மலரிலும் மஞ்சள் வழிகிறதே
புத்தம் புது விடியலும் புணருதே

எத்தனையோ தடவைகள் இந்த பாடல் வரிகளை கேட்டாலும், இன்று ரித்திக்கிற்கு உணர்வுபூர்வமாக உணர வைத்தன.
உடனே தொலைபேசியை மேசையில் வைத்துவிட்டு இன்றிரவு நடந்தவைகளை யோசித்தான்.

ஆஷாவிடம் எப்படி மனோரஞ்சன் மாமாவை தெரியுமா என்று கேட்டபோது ஆஷா ரியக்ட் பண்ணவிதம் ரித்திக்கிற்கு சந்தேகத்தை கிளப்பியது.
நம்ம கிட்ட ஆஷா எதையோ மறைக்கிறாள்.. என்று நினைக்கையில் மனோரஞ்சன் டாக்டர் கென்ஸர் பற்றிய டாக்டரே..
அது யாருக்காக இருக்கும் என்று எண்ணுகையில் மனமோ படபடத்தது.
இன்னைக்கே இத கேக்கலன்னா என் தலை வெடித்திவிடும் என்று மனோரஞ்சன் மாமா வேலையில்லாமல் தனியாக இருக்கும் நேரத்தை ஆராய்ந்து அணுகினான் ரித்திக்.

கதைப்போட்டு கதை எடுப்பதில் ரித்திக்கை விட்டால் யாருமில்லை.. அதே போல் மாட்டிக் கொண்டார் மனோரஞ்சன் டாக்டரும்.
ஆஷா கல்யாணம் கட்டிக்கப்போற பையன்னா எல்லோருக்கும் இதெல்லாம் தெரிந்திருக்குமே என்று ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் உண்மையை உடைத்தெறிந்தார் அவர்.

காதலின் வலிமை (completed) Where stories live. Discover now