சுடர்வாய் தீபமே 🔥1 🔥

1K 21 3
                                    

நள்ளிரவு குளிர் அவள் மேனியில் படர, தென்றல் தீண்டலில் லயித்திருந்தவள் மேனி சில்லிட்டது அவள் முன் மண்டியிட்டு ரிங்கை நீட்டிக் கொண்டிருந்த அவனால்..

சந்தோஷ் : லவ் யு தீபு...

தீபா : நிஜ.. நிஜமாவா? நீ என்னை விரும்புறியா சந்தோஷ்..என்று அதை நம்ப முடியாமல் குரல் தழுதழுக்க வினவ வசீகர சிரிப்பொன்றை உதிர்த்தவன்,

சந்தோஷ் : நிஜமா தான் டி.. உன்னை வானளவு உயரமா, கடலழவு ஆழமா, என் உயிர் மூச்சாக ஸ்வாசித்து வாழ்கிறேன்.. என் அர்த்தம் இல்லா வாழ்கைக்கு அர்த்தமா, பிடிப்பா எனக்கு எல்லாமுமா நீ வேண்டும்.. ஐ லவ் யு சோ மச் தீபு.. என்று மொத்த காதலையும் கண்களில் தேக்கி அவன் மொழிய அதில் விக்கித்து இன்பமாய் கரைந்து போனாள் பெண்ணவள்..

மகிழ்ச்சியாக அவன் முன் தன் கரத்தை நீட்ட அதில் ஆசையாய் அந்த மோதிரத்தை அணிவித்து விட்டான் ஆடவன்..

இலக்கற்ற வானை அந்த ஆழ்கடலில் இரைச்சலை சிறிதும் சட்டை செய்யாது வெறித்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்..

வெளியே ஆர்ப்பறித்துக் கொண்டிருக்கும் ஆழியைக் காட்டிலும், அவள் மனத்துள் பெரும் ஆழி பேரலையே அவளை சுழற்றி அடித்துக் கொண்டு இருந்தது..

சஞ்சலம் மட்டும் மனத்தில் தேங்கி ஏன் இறைவா எனக்கு மட்டும் இப்படி ஒரு வாழ்கை?? என்று விடை கிடைக்கா கேள்வியோடு அமர்ந்திருந்தவள் உள்ளம் கடந்து வந்த கசப்பான நினைவுகளை மீண்டும் மனத்துள் கொண்டு வந்து அவளை ரணப்படுத்த புதிதாய் அவள் கண்ணில் பூத்த பனிதுளி அவள் கண்ணின் ஓரம் கசிய இருந்த வேளை அதை தன் விரலால் சுண்டி விட்டான் அவன்..

"உனக்கு இதே வேலையா போச்சா பூ.. உன்னை காணோம்ன்னு உங்க வீட்டுல எவ்வளவு பயந்துட்டாங்கன்னு தெரியுமா டி? உயிரோட தான இருக்க? இல்ல செத்துட்டியாடி? இந்த ஃபோனை எடுத்தாதா என்ன??" என்று காட்டு கத்தாக அவன் கத்த,

"சாவு தான் வர மாட்டிங்குது.. நீயாவது எனக்கு இந்த நரகத்தில் இருந்து விடுதலை கொடுடா.. "என்று வாழ்கையை வெறுத்துப் போய் அவள் சொல்ல,

சுடர்வாய் தீபமேWhere stories live. Discover now