சுடர்வாய் தீபமே 🔥7🔥

235 15 2
                                    

அவன் தன் கையில் திணித்த காப்பி கோப்பையை சமையலறைக்கு இயந்திரம் போல் எடுத்துச் சென்றாள்..

மனம் மீண்டும் சஞ்சலப்பட்டு அவளை வதைத்தது..
இவர்கள் மணத்தில் துருவின் தாத்தாவான சென்னியப்பனுக்கு உடன்பாடில்லை..
பேத்தியாய் தன்னை பாவித்து நடத்தியவருக்கு குடும்பத்து மருமகளாய் தன்னை ஏற்றுக் கொள்ள சாதி எனும் வேலி தடை போட்டுவிட்டது..

மரகதம் பாட்டியின் வசைபாடுதலை மட்டுமே கேட்டு வளர்ந்தவளுக்கு சென்னியப்பனின் அன்பு அமிர்தம் போல் தித்தித்தது என்றால் அது மிகையாகாது..

தான் மட்டும் சந்தோஷை விரும்பாது இருந்திருந்து, வீட்டில் பார்த்த மாப்பிள்ளையையே கல்யாணம் செய்து தந்தையின் கொஞ்ச நஞ்ச அன்பையும் இழக்காமல் இருந்திருக்கலாம்.. அம்மாவுக்கும் உடல் நலம் சரியில்லாமல் போயிருக்காது..

தான் துடுக்காய் பேசி மற்றவரின் வாய் அடைக்கும் போது பெண் பிள்ளை அதிகமாய் பேசக்கூடாது என்று அர்த்தமற்ற கோட்பாடுகளை பின்பற்றாது வாஞ்சையாய் தன் தலையை வருடிக் கொடுத்து, ஊரிலிருந்து கிளம்பும் போது தன் பேத்திபோல் கையில் நான்கு ஐந்து 100 ரூபாய் தாள்களை திணித்து விடையளித்து, துருவ் சீத்தைக் காட்டிலும் அதிகமாய் தன்மேல் அன்பை பொழிந்த பெரியவரின் கோபத்தை சம்பாதித்திருக்க வேண்டியிருந்திருக்காது..

என்ன செய்வது? நெருப்பு சுடும் என்று பகுத்தறிவு போதித்தாலும் அனுபவம் தானே புத்தி புகட்டி நல்வழியை உணர வைக்கிறது..

இதை எல்லாம் மனம் குதிரை வேகத்தில் எண்ணிக் கொண்டு இருக்க முகமோ நிர்மலமாய் தான் இருந்தது..

சமயலறையிலிருந்த செல்ப் அருகில் நின்று கொண்டு இருந்தவள் எதிரிலிருந்த சுவற்றை வெறிக்க, அவள் அருகில் வந்தாள் சீதா..

"அண்ணி.." என்று அழைக்க
குரல் கேட்டுத் திரும்பியவள் செயற்கையாய் சிறு புன்னகையை உதட்டில் சூட்டிக் கொண்டு என்னவென்று வினவினாள்....

சுடர்வாய் தீபமேWhere stories live. Discover now