கண்ணீர் கோடுகள் அலங்கரித்திருக்க, துயில் கொண்டு இருந்தவள் அருகில் வந்தவனுக்கு மனம் கனத்தது..
அவள் தலையை மென்மையாய் வருடி விட்டவன் தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்..அனீஷிற்கு அழைத்தவன் அவனிடம் நடந்ததனைத்தையும் சொல்லிப் புலம்ப,
"என்னடா இப்படி பண்ணிட்டு இருக்க? அவளை சீண்டாம பேசி அவள் கஷ்டத்தை குறைக்க மாட்டியா? நீ இப்படி பேசுனா அவள் எப்படி டா உன்னை ஏத்துப்பா?" என்று வருத்தமாக வினவ துருவிற்கும் அந்தக் கவலை எழத்தான் செய்தது..
"இப்ப அவள் இருக்குற மனநிலையில்ல நான் போய் ஆதரவா நிக்குறது கூட அவளுக்கு பரிதாபமாதான்டா தெரியும்.. இதுவே நான் உரிமை எடுத்துக்கிட்டா கூட அவளுக்கு என்மேல கோவமும் வருத்தமும் தான் வரும்.. கொஞ்ச நாள்ல எரிச்சல் வந்து அவளே பழையபடி சுடரா மாறிடுவா.. இப்பப் போய் அன்பு காட்டுனா அந்த அன்பு கூட பரிதாபமும் பட்சாதாபத்தால வந்ததுன்னு நினைச்சு இன்னும் அந்த வட்டத்துக்குள்ள தான் இருப்பா.. அதுக்கு இது பெட்டர்ன்னு நினைச்சு தான் இப்படி பண்றேன்.. ஆனா அவள் அழுதா தாங்க முடிலடா.. "என்று தன் மனத்தாங்கலைக் கூற,
" ஆமா ஆமா.. அந்த சந்தோஷ்ட்ட அவளை செட் பண்ணிவிடாதன்னு தலைபாடா அடிச்சுக்கிட்டேன்.. அப்பலாம், மச்சான் அவள் விரும்பறாடா.. நாம அவனை பார்த்துக்கலாம்ன்னு சொல்லியே அவனை இவள் வாழ்கைல நுழைச்சிட்டு இப்ப அழுதா தாங்க முடிலையாம்.. அனுபவி.. ஏண்டா இப்படி??" என்று நொந்து கொள்ள அந்தப் பக்கம் பலத்த அமைதியே நிலவியது..
" ப்ச்.. சரி விடு.. அப்படி செய்லனா உனக்கு இப்ப உன் பூ கிடைச்சிருக்க மாட்டா.. எப்படியும் சரி பண்ணிடலாம்..இனிமேல் அவளை ரொம்ப சீண்டாத.. நான் பொருத்துக்க மாட்டேன்.. நீ போய் தூங்கு.. "என்று நண்பனின் குற்ற உணர்வை உணர்ந்து சொல்ல,
"ம்ம் சரி டா.." என்று சூரத்தே இல்லாது ஃபோனை வைக்கப் போக,
" டேய் லேம்ப் போஸ்ட்.. பீலிங்சா.. அடச்சீ.. போய் தூங்கு.. எனக்குனே வருதுங்க.. போ.. போய் அவளை தொல்லை பண்ணாம கீழப்படுத்துத் தூங்கு"என்று அவன் மனநிலையில் இலகுவாக்க வேண்டி சொல்ல அவனும் சிறு முறுவலுடன் கைபேசியை அணைத்தான்..
YOU ARE READING
சுடர்வாய் தீபமே
Romanceஅனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவான...