அனி சொல்லி விட்டு சென்றதும் சிலை போல் அமர்ந்து இருந்தவள் அருகில் ஓடி வந்த துருவ்,
"பூ.. என்னடி கிளம்பாம இருக்க? ஃபைல்ஸ் பெண்டின்க்ல இருக்குறது நினைவு இருக்கா? கிளம்பு.." என்று அவளை எப்போதும் போல் எழுப்பி விட்டு பிறகு மீண்டும் வேக நடையோடு தன் கேபின் நோக்கி சென்றான்..
அதைக் கண்டவள் கண்கள் இலேசாக கலங்கி விட மனமோ கடந்த கால நினைவுகளுக்கு சென்றது..
தீபசுடர் பணியில் சேர்ந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது..
" சார்ர்ர்ர்ர்ர்ர்....." என்று ராகம் இழுத்தபடியே துருவ் அருகில் வந்த சுடர் ஃபைலை நீட்ட அவளின் உச்சஸ்தாயியில் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் புறம் திரும்பியவன் முகத்தில் அதைக் காட்டாது,
"யாஹ் சுடர்.." என்று வினவ,
"ஹே நெட்டக்கொக்கு டென்ஷனான மாதிரியே தெரிலையே.. ஆகுலனா என்ன போறதுக்குள்ள ஏத்திடலாம்.." என்று நினைத்துக் கொண்டவள் வெளியே இளித்துக் கொண்டு அவன் இரண்டு நாட்களுள் தயாராக்க சொல்லிய கோப்பை அவன் முன் நீட்ட அதை வாங்கினான் துருவ்..
"நீங்க போங்க சுடர்.. நான் பார்த்துட்டு சொல்றேன்.. அன்டில் தென், பிகே ஸ்மால் ஸ்கேல் கம்பெனியோட டிடெயில்ஸ் ஹின்டா சீராக்கிட்ட இருக்கும்.. அதை வாங்கி ரிப்போர்ட் ஜெனரேட் செய்திடுங்க.." என்று அடுத்த வேலையை அவள் தலையில் கட்டி விட்டு திரும்பிக் கொண்டான்.
"காதையா டேமேஜ் பண்ண பார்த்த.. இன்னிக்கு உன் கையை உடைக்கிறைன் எம்எம் (மஞ்ச கலர் மாரியாத்தா) "என்று வன்மமாய் நினைத்து சிரித்துக் கொண்டான்..
" லேம்ப் போஸ்ட் தலையா.. உன்கிட்ட அப்ரன்டைசா வந்து மாட்டினதுக்கு என்னை எவ்ளோ சிறப்பா செய்ய முடியுமோ அவ்ளோ சிறப்பா செய்றல்ல.. இரண்டு வாரத்தில் இரண்டு கிலோ உன்னை திட்டியே குறைஞ்சு போயிடுச்சு.. ஒரு மனுஷி வேலையை முடிச்சிட்டு வந்தா அடுத்த வேலையை எடுத்து நீட்டிட்டே போற. .. இருடி மாப்பு.. லன்ச்ல பாத்துக்கிறேன்.. "என்று கருவிக் கொண்டு தன்னிடத்திற்கு சென்றாள் சுடர்..
YOU ARE READING
சுடர்வாய் தீபமே
Romanceஅனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவான...