பட்சிகள் இசை மீட்ட கரு மேகங்களை விரட்டி விட்டு வேந்தனான சூரியன் வானில் பவனிவந்த அந்த காலை வேளையில், அலாரம் உச்சபட்ட டெஸிபலில் அலறி அந்த ஆறடி மனிதனை எழுப்ப முயன்று கொண்டிருந்தது..
இன்றாவது என் உயிர் போகும் முன்னர் உன்னை எழுப்பிவிடுவேனா என்ற வேதனை கொண்டே அது ஒலிக்க பாவம் கடைசியில் தோல்வியைத் தழுவி உயிரை துறந்தது...
எப்போதும் போல் திரைச்சீலை வழியாய் சூரியன் அவனை சுட்டெரிக்க மெல்ல துயில் கலைந்து முகம் சுருக்கியவாறு படுக்கையில் ஃபோனை தேடியவன் கைகிளில் சிக்கியது அலைபேசி..
அதுவும் பாதி உயிரற்ற நிலையில் கிடந்த போதும் தன் எஜமானிக்காக உயிரை கையில் பிடித்து வைத்திருக்க அதில் மணியை பார்த்தான்..
நேரம் 8.10என காட்ட பாதி தூக்கத்தில் இருந்தவன் அடித்து பிடித்து கொண்டு எழுந்தான்..
சை.. இன்னிக்கும் லேட்டாகிடுச்சு.. எதுக்கு தான் 500 ரூபாய் போட்டு இந்த அலாரத்தை வாங்கினேனோ... உதவாக்கர.. என்று டேபிளில் ஒரு ஓரமாக கிடந்த அலார கடிகாரத்தை எப்போதும் போல் ஓங்கி பெட்டில் வீசி விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான் துருவ் விஜயன்..
தினமும் ஏச்சுப்பேச்சு வாங்கிக் கொண்டு இருந்த கடிகாரத்துக்கு எப்போது டா இவனிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என்றிருந்தது..
பாவம் ரிட்டையர்மெண்டே இல்லாத வேலை.. கடைசி வரை இவனிடமே மீதி வாங்க வேண்டி வரம் வாங்கி கொண்டு பிறந்து விட்டது..
ஆனால் அதற்கும் விடுதலை கொடுக்க, அவன் தூக்கத்தை விரட்ட குட்டிப் புயலாக இன்று வரவிருக்கிறாள் வேங்கையவள் என்று அறியாமலே வேகமாக குளித்து விட்டு வெளியே வந்தவன் ஃபார்மல் டிரஸில் பளிச்சென்று கிளம்பி எப்போதும் குடிக்கும் கிரீன்டீயை இரண்டு மிரடு
அருந்தியவன், சார்ஜரில் போட்டிருந்த ஃபோனை எடுத்துக் கொண்டு சாவியையும் ஹெல்மெட்டையும் மறக்காமல் எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு கிளம்பினான்... இல்லை ஓடினான்..
YOU ARE READING
சுடர்வாய் தீபமே
Romanceஅனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவான...