கீச் கீச் என்ற சிட்டுக் குருவிகளின் இசைக்கச்சேரியில் ஆதவனைப் போல் மெல்ல துயில் களைந்தாள் தீபசுடர்..
அந்த அழகிய காலை வேளை அவளை மென்மையாய் வரவேற்க தலையணையில் முகம் புதைத்தவளுக்கு எழுந்து கொள்ள மனமே இல்லை.."தீபா.. ஆபீஸ்க்கு லேட்டாகிரும்.. சீக்கிரம் எழுந்து ப்ரஸ் பண்ணு" என்று மகளை எழுப்பியபடி நெஸ்கபே தூள் கமகமக்க கையில் காப்பி கோப்பையோடு உள்நுழைந்தார் வளர்மதி..
"குட் மார்னிங்.." என்று தூக்கம் முழுதும் களையாமல் குப்புறப்படுத்து இருந்தவள் இரண்டு கால்களையும் சேர்த்து வணக்கம் போல் செய்ய அவள் காலிலேயே போட்டவர்,
" ஒரு பக்கமா படுத்துப் பழகுனு சொன்னா கேட்கிறியா? எந்திரிச்சி போய் குளி" என்று மீண்டும் ஒரு காலில் சாத்தி விட்டு போக, இதெல்லாம் கொசு கடித்ததைப் போல் பொறுமையாய் எழுந்து அமர்ந்தவள் சோம்பல் முறித்து விட்டு, காலை மெத்தையில் இருந்து கீழே வைக்கவே 10 நிமிடம் பிடித்தது..
பிறகு மணியைப் பார்த்தவள் அது சரியாக 7.00ஐக் காட்ட அரக்க பரக்க குளியலறை சென்று குளித்து முடித்து விட்டு அவளுக்குப் பிடித்த ராமர் பச்சை வண்ண அனார்கலி அணிந்து கொண்டு வெளியே வந்தவள் சூடாக இருந்த காப்பியை குளிருக்கு இதமாக மிரடு மிரடாக அருந்தி விட்டு தாய் செய்து வைத்திருந்த தக்காளி சாப்பாட்டை திருப்தியாக உண்டு விட்டு தன் கைப்பையில் டிஃபனை எடுத்து வைத்தாள்..
"ஏன் மதி, நான் என்ன கொரியர் கேர்ளா உனக்கும் அந்த லேம்ப் போஸ்ட் தலையனுக்கும்? அவன் உன் சாப்பாடு அவன் அம்மா சாப்பாடு மாதிரி இருக்குனு சொன்னதும் அன்பென்ற ஜீவ நதி கரை புரண்டிடுச்சா? என்னால டெயிலியும் இவ்ளோ வெயிட்டை தூக்கவே முடில" என்று குறைபட்டபடியே சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்..
எதையும் தாயிடம் இந்நாள் வரை மறைத்துப் பழக்கப்படாதவள் அன்று துருவ் தன் சாப்பாட்டை சாப்பிட்டது, அவனுக்கு இனி தன் சாப்பாட்டை கொடுப்பதாக சொல்லியதென்று அனைத்தயும் ஒப்புவிக்க வளர்மதியோ தாய் என்ற வார்த்தையிலேயே உருகிப் போய் விட்டார்..
ஒருவாரமாக அவனுக்கு என்று கொடுக்கும் டிஃபனில் எடை கூடிப் போக அலுத்துக் கொண்டாள்..
YOU ARE READING
சுடர்வாய் தீபமே
Romanceஅனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவான...