செதுக்கிய சிலையாய் காதல் நிரம்பிய பார்வையுடன் ஒருவனும், அதிர்ச்சி நிறைந்திருந்தாலும் கண்களில் ஒரு படபடப்பு, கன்னத்தில் சிறிது வெட்கம் என்று அப்சரசாய் நின்று இருந்தவள் தனக்கு சொந்தமில்லை என்ற உண்மையே அவனை மீண்டும் மீண்டும் காயப்படுத்தியது..
மனம் கசந்து கசந்து போனது.. இருந்தும் ரணப்பட்ட மனதை அது இன்னும் குத்திக் கிழிக்கத் தவறவில்லை..
ஃபோனை அணைத்த பரிதியின் சூடான கண்ணீர் அவனின் விலையுயர்ந்த புளூபெரி ஃபோனை நனைத்தது..வண்டியின் ஓசை கேட்டதும் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் அவ்வளவே என்பது போல் எந்த முக மாற்றத்தையும் முகத்தில் காட்டாது அமைதியாய் அமர்ந்திருக்க அவள் அருகில் வந்தான் துருவ் விஜயன்.
"வாடி போலாம்.." என்று தன்மையாகவே அழைத்தவனிடம் எந்த பதிலும் சொல்லாது எழுந்து நின்றாள்..
அவள் தன்னுடன் தான் வரப் போகிறாள் என்ற எதிர்பார்ப்போடு அவன் வண்டியை எடுக்கப் போக அவனை தாண்டி விறுவிறுவென என்று நடந்தவளின் செயலில் தலையில் அடித்துக் கொண்டு அவளைப் பின் தொடர்ந்தான்..
"தீபு..நில்லுடி.." என்று அவள் கையைப் பிடிக்க அவள் நின்றாள் தான்.. ஆனால் அவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை..
"கோபத்தில விட்டுட்டுப் போய்ட்டேன்..அதுக்கு சாரி.. இப்ப வா லேட்டாச்சு.."
"இல்ல நான் பஸ்லையே வந்துக்கிறேன்.." என்றாள் பிடிவாதமாக..
" ஏய்.. நீயும் தானே நான் கூப்பிட்டப்ப வரல.. சாரியும் கேட்டுட்டேன்.. அப்புறமும் ஓவரா பண்ணாதடி.. வா போலாம்.." என்றவனுக்கு அவள் பிடிவாதத்தில் இழுத்துப் பிடித்துக் கொண்டு வந்த பொறுமையும் காற்றில் கரையத் தொடங்கியது..
" நீ சாரி சொல்லனும்ன்னு அவசியம் இல்ல துவி.. சொல்லப் போனால் நான் தான் உன்னை எம்பேரஸ் பண்ணதுக்கு சாரி சொல்லனும்.. ஆனால் தப்பு என்மேலையும் இருந்தப்ப எதிர்த்து சண்டை போட விருப்பமில்லை.. ஆனா நீ எனக்கு சப்போர்ட் பண்ணப்ப நான் அமைதியா இருந்தது, உன்னை இன்சல்ட் பண்ணனும்ன்னு இல்ல.. ஒன்ஸ் எகெயின் சாரி"என்று வருத்தம் தோய்ந்த குரலில் மன்னிப்புக் கேட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..
YOU ARE READING
சுடர்வாய் தீபமே
Romanceஅனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவான...