சாளரம் வழியே வந்த தென்றலோடு குல்மோகார் பூக்களும் அவள் மேனியைத் தீண்டி சென்று அந்த அறையினுள் விழுக, சன்னல் கம்பிகளை இறுக பற்றிக் கொண்டு நின்றிருந்தாள் தீபா..
மனம் நிர்தாட்சண்யமாய் இருந்தது..
அப்போது பூனை போல் வந்து அவளை அணைத்து நின்றவன் செய்கையில் திடுக்கிட்டவள் திரும்பிப் பார்க்க, இதழில் வசீகரப் புன்னகையோடு கண்களில் குறும்போடு நின்றிருந்தான் துருவ்..அவனை உற்று நோக்கியவள் அவன் பிடி தன் வெற்றிடையில் இறுகியதை உணர்ந்து,
"புருஷங்ற உரிமை எடுத்துக்க போறியா??" என்று வெற்றுக் குரலில் பெண்ணவள் வினவ,"நான் தானடி உன் புருஷன்.. அப்புறம் நான் உரிமை எடுத்துக்காம யாரு எடுத்துப்பா?" என்று அவனும் அமர்த்தலாய் பதில் சொல்ல ஒரு சொட்டு விழி நீர் அவளை அறியாதே தேங்கியது கண்களில்..
மனதை எதற்கோ பிராய்த்தனப்படுத்த முயல,
"ஏய்.. என்னை ரேபிஸ்ட் ரேஞ்ச்க்கில்லாம் கற்பனை பண்ணிடாத.. அதுக்கெல்லாம் நான் வொர்த்தில்லடி.." என்று அவள் காதுமடல் உரசி, இன்னும் அவள் இடையை தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டவன் சொல்ல, துளிர் விட்ட கோவத்தில் அவனை ஏறிட்டாள்..
அதை கண்டு புன்முறுவல் சிந்தியபடியே அவளை அப்படியே தன் கைவளைக்குள் வைத்தபடியே திருப்பியவன், உரிமையாய் அவள் நாசியில் எஸ்கிமோ முத்தத்தை பதித்தவனாய்,
"இங்க பாருடி ஜஸ்ட் டுடே பொண்டாட்டி.. இது தான் இந்த பச்ச பிள்ளைக்கு முதல் கல்யாணம்.." என்று தன்னை சுட்டிக் காட்டி சொல்ல இவளுக்கு இன்னும் ஆத்திரமாய் வந்தது..
" சேர்சேரி.. சமாதனம்.. உனக்கும் இது தான் முதல் கல்யணம்.. டெபினட்லி லாஸ்ட்டும் இது தான்.. "என்று சொல்லியவனின் குரலில் கண்ட உறுதியில் அவனை விழி அகலாது பார்த்தாள்..
"உனக்கு நிட்சயம் நான் ஸ்பேஸ் கொடுக்க தான் போறேன்.. அந்த ஸ்பேஸ் எனக்கும் தான்..ஆனால் அதுக்கான பவுண்டரி உன்னை என்னவளா மாத்திக்கிறதா மட்டும் தான் இருக்கும்.. மத்தபடி, நானும் சராசரி பையன் தான் பூ.. எனக்கும் ஆசை இருக்கு.. பொண்டாட்டியை கொஞ்சனும்.. சில்மிஷம் செய்து சிவக்க வைக்கணும்.. ஹக் பண்ணணும்.. கிஸ் பண்ணணும்.. எல்லாம் பொறுமையா பண்ணலாம்.. "என்ற சொல்லி சொல்லி இங்கு இவளை பத்ரகாளியாய் மாற்றிக் கொண்டு நின்றான்..
YOU ARE READING
சுடர்வாய் தீபமே
Romanceஅனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவான...