சுடர்வாய் தீபமே 🔥2 🔥

371 20 3
                                    

தென்றல் முகத்தில் பட, அதன் குளுமைக்கு நிகராய் தந்தையின் வசைபாடுதல் சூடாக சிறப்பாக அரங்கேறிக் கொண்டு இருக்க, பைக் பின்னால் அமர்ந்து இருந்தாள் தீபா..

ஆனால் அந்தோ பரிதாபம் அவள் இவ்வுலகிலே இல்லை..அதை உணராது திட்டித் தீர்த்துக் கொண்டு இருந்தார் சங்கர்..
கடந்து வந்த நாட்கள் உள்ளுக்குள் வலம் வந்து கொண்டு இருக்க மனம் கனத்துப் போயிருந்தது அவளுக்கு..

வீட்டின் முன் வண்டியை நிறுத்த தன் வீட்டை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அயர்வாக இருந்தது..

நேராக உள்ளே சென்றவளை வசைபாடி வரவேற்றார் மரகதம் பாட்டி..

"பொட்டபுள்ளை ரெண்டு நாள்ல கல்யாணத்தை வெச்சுக்கிட்டு எங்கடி ஊர் சுத்திட்டு வர.. இப்படி சுத்தி தான் ஒருதரம் எங்களை சபைல அவமானப்படுத்தினவ.. இன்னொரு தரம் எங்களை கூனி குறுகி நிக்க வைக்கப் பார்க்கிறியோ.. எந்த நேரத்தில உன் ஆத்தாக்காரி உன்னைப் பெத்தாலோ அப்பப் பிடிச்சது என் பையனுக்கும் எனக்கும் கிரகம்.. ரெண்டு நாள் அடங்கிட்டு இரு.. அப்புறம் அந்த திமிர் பிடிச்ச வீணாப்போனவனை கட்டிட்டு எங்கயோ சுத்து.. எக்கேடோ கெட்டுப்போ.. "என்று பெரியோர் என்ற நிலையில் இருந்து தாழ்ந்து போனார் மரகதம்..

ஒரு மாதத்துக்கு முன்னால் இதை மரகதம் சொல்லி இருந்தார் எனில் இந்நேரம் அடுத்த வார்த்தை பேச வாய் இல்லாமல் செய்திருப்பாள் சுடர்.. தீபசுடர்..பேச்சில் பட்டாசு வெடித்து இருக்கும்.. ஒரு வாரத்திற்கு அவளை நேராகப் பார்த்து திட்ட முடியாது வாய்க்குள்ளேயே அர்ச்சனை நடத்தி இருப்பார் அந்த பெரியமனுஷி..

ஆனால் இப்போது இருப்பதோ தீபா..
அவர் பேசியது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுயது போல் இருந்தாலும் அமைதியாக தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் தீபா..

முகம் கழுவி விட்டு மாற்றுடை அணிந்து கொண்டு தன் தந்தை அறையை ஒரு முறை தட்டி விட்டு உள் நுழைந்தாள்..

அங்கு போடப்பட்டிருந்த மேசையில் அமர்ந்து திருமணத்திற்கு தேவயான கணக்குகளையும் செலவையும் பட்டியலிட்டு கொண்டு இருந்தார் சங்கர்..

சுடர்வாய் தீபமேWhere stories live. Discover now