உச்சி வெய்யில் உள்ளந்தலையில் பட்டுத் தெறித்து உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்திக் கொண்டு இருந்தது..
ஆனால் வெளியில் இருக்கும் சீதோஷன நிலைக்கு முற்றும் முரணாக அந்த குளிரூட்டப்பட்ட நவநாகரிகம் பொருந்திய பப்பில் காலை என்றும் பாராது ஒரு ஓரமாக அமர்ந்து தன் கைக்கு அடக்கமான கண்ணாடி குவளையில் இருந்த மதுவை மிரடு மிரடாக அருந்திக் கொண்டு இருந்தான் சந்திரன்..அவன் அருகில் வந்த சேது,
"என்ன மச்சான்.. மதியமே இங்க வந்திருக்க.." என்று கேட்டபடி அவன் அருகில் பாதி காலியாக இருந்த மதுவை ஒரு கோப்பையில் தனக்காகவும் ஊற்றிக் கொண்டு கேட்க,
"போரடிச்சிது டா.. அதான் ஒரு பெக் அடிச்சா ரெப்ரெஷா இருக்கும்ன்னு வந்தேன்.." என்று இதழ் வளைத்து அலட்சியமாக பணத்திமிர் முகத்தில் தெரிய சொன்னான் சந்திரன்..
"உனக்கென்ன டா.. அண்ணா பெரிய கம்பெனியோட எம்டி.. பல கோடி சொத்தும் இருக்கு.. நீ எப்ப வேணா குடிக்கலாம்.. உன்கூட இருக்குறதால தான் நானும் அப்பப்ப கொஞ்சம் உன்பெயரை சொல்லி குடிச்சிக்கிறேன்.." என்று ஜால்ரா அடித்தவனின் கண்ணில் தெரிந்த மெல்லிய பொறாமையை கண்டு கொண்டவன் போதை தாங்கிய கண்களால் அவனை ஏறிட்டு விட்டு ஒன்றும் பேசாது முறுவலித்தபடி இன்னொரு மிரடு அருந்தினான்..
ஒரு மணி நேரம் கழித்து அங்கிருந்து கிளம்பிய சந்திரன் தன் காரை எடுத்துக் கொண்டு அவன் வீடு நோக்கி சென்றான்..
உள்ளே நுழைந்தவனைப் பார்த்த கமலி அவன் அருகில் வர மது வாடை நாசியைத் துளைக்க அவனை ஒரு கோவப் பார்வை பார்த்து விட்டு அவர் அறைக்கு சென்று விட்டார்..
ஒரு பெருமூச்சோடு தன் அறையை நோக்கி விரைந்தான் சந்திரன்..அலுலவகம் விட்டு வீட்டுக்கு வந்த ப்ரின்சி தன் செருப்பைக் கலட்டி அதற்கான இடத்தில் வைத்து விட்டு தன் கரு விழிகளை அங்கும் இங்கும் சுழற்றியபடியே தன் வீட்டுக்குள் மெல்ல அடி எடுத்து வைத்தாள்..
"ப்ரின்ஸ்.." என்ற கூவலோடு அவளை நோக்கி பாய்ந்து வந்த ஸ்டீபன் அவள் கையில் இருந்த பையை பறிக்க,
YOU ARE READING
சுடர்வாய் தீபமே
Romanceஅனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவான...