சுடர்வாய் தீபமே 🔥25 🔥

111 7 1
                                    

💗💗தேவதையே வா என் தேவதையே வா
உன் இரு விழி அசைவினில் எழுதிடும்
கவிதை நான்

பூமாலையே வா என் பூமாலையே வா
உன் விரல் தொடும் தொலைவினும்
விழுகிற அருவி நான்

நீரிளில்லாமல் மீன்களும்
வேரில்லாமல் பூக்களும்
பாவம் தானே பூமியில்

சிலுவையிலும் சிறகென பறந்திடும்

தேவதையே வா என் தேவதையே வா
உன் இரு விழி அசைவினில் எழுதிடும்
கவிதை நான்💗💗

கடந்து செல்லும் பல ஜோடிகளின் காதலும் சூரிய ஒளியால் அவர்கள் முகம் போலவே பொழிவாக இருக்க, பகலவனோ அவர்களை கண் குளிர கண்டு கொண்டு இருந்தான்..

அனைவரயும் மேற்பார்வை பார்த்து கொண்டு இருந்தவன் கவனம் அங்கு அமைதியின் திருவுருமாய் அமர்ந்து, தன் கடல் காதலியை வெறித்துக் கொண்டு இருந்த இருவர் மீதும் நிலைகுத்தி நின்றது..

தன்னவளே கேள்வி கணைகளை தொடுக்கட்டும் என்று அமைதி காத்தான்..

"விஜய்.." என்று அழைத்தாலே தவிர அவள் பார்வை என்னவோ கடலின் மேல் தான் நிலையாய் நின்றது..

அவள் அழைப்பில் அவள் புறம் திரும்பியவன் அவளை பார்வையால் அளந்தான்..

"கேட்க பல கேள்வி இருக்குலடி.. ஒன்னொன்னா கேளு.." என்று நினைத்து அவளை பார்த்துக் கொண்டு இருந்தான்..

"ப்ளீஸ் விஜய்.." அவளால் அந்த வார்த்தையையே விம்மலில்லாதே முடிக்க முடியவில்லை..
எதற்கு அழைத்து வந்து இருக்கிறாள் என்று அவன் அறிந்ததே.. அவள் மனம் அயர்ச்சியின் வடிகாலாய் அழுகையை தேடிக் கொண்டு இருக்கிறது என்று அவள் சொல்லாமலே அவனுக்குப் புரிந்தது.. இருந்தும் அவளுக்கு பதில் வேண்டும் என்றால் அவள் வாய் திறந்து கேட்டு தான் ஆக வேண்டும் என்ற முடிவில் இருந்தான்..

அவள் விசும்பல் அதிகரித்ததே தவிர அவனிடம் அவள் நினைத்ததை கேட்க வாய் திறக்கவில்லை..
" எல்லா முறையும்  நீ சொல்லாமலே உன்னை நான் புரிஞ்சுக்கனும்ன்னு எதிர்பார்க்கிற.. ஆனா நான் எனக்காக உன்கிட்ட காதலை கேட்க கூடாதுல" என்று கசந்து முறுவலித்தவனுக்குள் இருந்த ஆதங்கம் வெளியாகியது..

சுடர்வாய் தீபமேWhere stories live. Discover now