சுடர்வாய் தீபமே 🔥26 🔥

359 11 4
                                    

தன் தோள் மேல் சாய்ந்தவளின் அருகாமை தந்த பரவசத்தோடே அலைபேசியில் தன் வேலைகளை முடித்தான் துருவ் விஜயன்..
நிமிர்ந்து பார்க்கும் போது அவன் குடும்பமே அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தது..

துர்காவும் சென்னியப்பனும் இவர்களை நிறைவான புன்னகையுடன் ஏறிட்டுக் கொண்டு இருக்க, நீலகண்டனோ எந்த உணர்வையும் வெளிப்படுத்தாது அமர்ந்து இருந்தார்..

சீதாவோ அண்ணனைக் கேலியாகப் பார்த்தபடி அமர்ந்து இருந்தவள்,
"இதுக்கு தானே ஆசைப்பட்ட.. நடத்து.. நடத்து.." என்று தன் இருக்கையில் இருந்து எழுந்து தமையனின் காதில் ரகசியமாய் உரைத்து கேலிப் புன்னகையோடு அங்கிருந்து வெளியேறினாள்..

எங்கே செல்கிறாய் என்று கேட்ட துர்காவிடம் காற்றாட நின்று விட்டு வருகிறேன்  என்று சொல்லி விட்டு எழுந்து சென்றாள்..

குடும்பத்தாருக்கு சிறு கீற்றுப் புன்னகையைக் கொடுத்தவன் தன் தோளை ஏதுவாக வளைத்து தீபசுடரை தாங்கிக் கொண்டான்..
அலைந்த களைப்பின் அசதியிலேயே சீக்கிரமே உறக்கம் அவளைத் தழுவிக் கொண்டது..

சிறு புன்னகையோடே நடைபாதையில் நடந்த சீதா எதிர்பாராமல் எதிரே வந்தவன் மீது முட்டிக் கொண்டாள்..

"சாரி.." என்று நிமிர்ந்தவளிடம்,

"ஹாய் தண்ணி வண்டி.." என்று பளீச் புன்னகையோடு அவளை எதிர் கொண்டான் சந்திரன்..

அவனை அவள் அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை..

"ஹே.. யார்டா தண்ணி வண்டி? ச்சீ.. உன்னை மாறி மனுசனை.. ப்ச் இல்ல உன்னை, ஹெட்வெயிட் பிடிச்ச பன்னியை, நான் திரும்பவும் பார்க்கக் கூடாதுன்னு தான் நினைச்சேன்.. என் பேட் டைம், ஹார்ட்லெஸ் டாக்கைத் திரும்பப் பார்க்கனும்ன்னு தலையெழுத்து.." என்று வாய்க்கு வந்த வார்த்தைகளை கொட்டினாள் சீற்றமாய்..

சந்திரனைக் கண்டாலே அருவருப்பாக இருந்தது சீதாவிற்கு..
இவனெல்லாம் என்ன மனிதன்? ஊரே திரண்டு அவமதிக்கும் போது தன் சொந்த மாமன் மகளை காக்கும் பொறுப்பை துச்சமாய்க் கருதி மண்டபத்தில் இருந்து வெளியேறிய முதுகெழும்பில்லா கோழை.. என்ற பிம்பத்தைத் தான் அவள் மனத்தில் பெற்றிருந்தான் சந்திரன்..

Vous avez atteint le dernier des chapitres publiés.

⏰ Dernière mise à jour : Sep 01, 2022 ⏰

Ajoutez cette histoire à votre Bibliothèque pour être informé des nouveaux chapitres !

சுடர்வாய் தீபமேOù les histoires vivent. Découvrez maintenant