விஜயன் பேசியதை யோசித்தவளாய் தன் அறைக்கு வந்தாள் சுடர்..
அறையில் அவன் இல்லாது போக அப்படியே கட்டிலில் குப்பறப்படுத்தாள்..
இருந்த மன நிலைக்கு சற்று உறங்கினால் நன்றாக இருக்கும் என்று இருந்தது.. இருப்பினும் இப்போது தொலைந்த தூக்கத்தைப் பெற ஒருக்களித்து படுப்பதற்கு பதில் இவ்வாறு படுத்தால் எளிதாக தூங்கும் வழக்கம் கொண்டதால் அப்படிப் படுத்தாள்..கடந்த இரண்டு மாதங்களாக அயர்ந்து இருந்தவளுக்கு வாழ்கை மீது பிடிப்பு இல்லாது போனது..
இப்படித் தான் வாழ வேண்டும் என்று இறைவன் வகுத்துக் கொடுத்தானா? இந்த வயதில் படிப்பு, இந்த வயதில் கல்யாணம், இந்த வயதில் குடும்பம், குழந்தை என்று ஒரு வரைமுறையை வகுத்துக் கொடுத்து இங்கு வாழ சொல்லியது யார்? ஒவ்வொருவருடைய பயணமும் வாழ்வில் வித்தியாசமானது தானே..
ஆனால் சமுதாயம் என்ற வேலி அவளை குத்தி ரணப்படுத்தி விட்டது..அதன் கோட்பாடுகளை அவள் மீது திணித்து விட்டு அவளை கஷ்டத்தில் மட்டுமே உழல வைத்திருக்கிறது..
விரக்தியில் உழன்று கொண்டு இருப்பவளுக்கு விஜயனை ஏற்றுக் கொள்வது சத்தியமாக சாத்தியமாகாத ஒன்று..
அப்படி என்ன தான் நடந்தது என்று அவள் மன நிலையில் இருந்து பார்த்தால் மட்டுமே அவள் அனுபவித்த வலிகளும் அது ஏற்படுத்திய ரணங்களும் புரியும்.. அதன் பிறகே அவளை தீர்மானிக்க முடியும் நம்மால்..தீபசுடர்...
சங்கர் - வளர்மதியின் பேர் சொல்லும் புதல்வி..ஆனால் அது வளர்மதியைப் பொறுத்த வரை மட்டுமே..
சங்கர் என்ற மனிதருக்கு, அவள் வெறும் கடமை.. ஏன் சுமை என்று கூட சொல்லி விடலாம்..1997இல் மரகதத்தின் முதல் செல்வமான ஷங்கருக்கு திருமணம் வளர்மதியோடு நடைபெற்றது..
நான்காண்டுக்கு முன்னரே கமலியைத் திருமணம் செய்து வைத்திருக்க அவருக்கு நான்கு வயதில் இளம்பருதியும் இரண்டு வயதில் சந்திரனும் இருந்தனர்..சங்கர் மரகதத்தின் கை பொம்மை இன்று வரையிலும்..
தான் பெற்ற பெண்ணிற்கு மட்டும் உணர்வுகள் இருப்பதாக நினைத்தவர் வீட்டிற்கு வந்த வளர்மதியை வார்த்தை கொண்டு சாடி மனதால் சிதைத்தார்..
வளர்மதி இவர்களைக் காட்டிலும் சற்று வசதி குறைந்த இடத்தை சார்ந்த பெண்ணாக போய் இருக்க எப்போதும் குத்தல் பேச்சு பேசி சாடிக் கொண்டு இருப்பார் அவர்..
YOU ARE READING
சுடர்வாய் தீபமே
Romanceஅனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவான...