புயல் வேகத்தில் வீடு வந்து சேர்ந்தவன் அவளின் கையை பிடித்துக் கொண்டு தன் இல்லத்துக்குள் நுழைந்தான்.
"பூ.. போய் குளிச்சுட்டு வா.. இது சீத்தோட டிரஸ்.. போட்டுக்க.. அப்புறம் இந்தா.." என்று தங்கையின் துணியையும் ஒரு கவரையும் அவள் கையில் கொடுத்து விட்டு ஹாலில் வந்து அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரத்தில் தலைக்கு குளித்து விட்டு துவைத்த துணிகளை கொடியில் காயப்போட்டவள் ஹாலிற்கு வந்தாள்..
ஈரம் சொட்டிக் கொண்டு இருக்க அப்படியே கிளிப் போட்டு இருந்தவள்,
"கிளம்பலாம் துருவ்.." என்றாள்..
"ஏய் லூசு.. தலையை துவட்டினியா இல்லையா டி?? இப்பவே கிளிப் போட்டா தலைவலி வந்திரும்.." என்று சொல்லியபடி அவள் தலையில் இருந்த கிளிப்பை எடுத்து விட்டு அங்கிருந்த டவலை எடுத்து அவளுக்கு துவட்டி விட அருகில் வர அவனைத் தடுத்தவள்,
" லேட் ஆகிடுச்சுடா..பைக்ல போகும் போது அதுவே காய்ந்திடும்.. வாடா கிளம்பலாம்.. "என்று கண்களில் சிறு மிரட்சியோடு பதற்றமாக வெளியே செல்லப் போனவளைப் பார்த்து பல்லைக் கடித்தவன்,
"பூ.. என்னை டென்ஷன் ஏத்தாம இங்க வா.." என்று அவன் கறாரான குரலில் சொல்ல அமைதியாக அவன் அருகில் வந்து நின்றாள்.
" எங்கடி என் பட்டாசா வெடிக்கிற சுடர்? அவளை என்ன பண்ண??" என்று அவன்
ஆதங்கமாய் கேட்க விரக்தியாய் புன்னகைத்தவள்,"அவள் செத்துட்டா.. எனக்குள்ள அவளை தேடாத.. இப்ப இருக்குற தீபா எல்லாத்துக்கும் பயந்து தான் இருக்கா.. சமூகத்தோட பார்வையும் அது எப்ப விஷமான வார்த்தைகள் கொண்டு தன்னை கொட்டும்ன்னு பயத்துல தான் வாழ்ந்துட்டு இருக்கா.. "என்றாள் சுரத்தேயில்லாமல்..
அதில் அவனுக்கு கோவம் வந்தாலும்,
"மணி 7 தான் ஆகுது.. இதுக்கு மேலயும் லேட்டா எத்தனை முறை இங்க இருந்திட்டு உன்னை வீட்டுல நானும் சீத்தும் கொண்டு வந்து விட்டிருக்கோம்.. அப்ப அவங்க எது திட்டினாலும் கண்டுக்காம போனவ இப்ப ஏண்டி நடுங்கிற?? என்னை மீறி உன்னை ஒன்றும் சொல்ல மாட்டாங்க.." என்று சொல்லிக் கொண்டே ஓரளவுக்கு துவட்டி விட்டவன் அங்கு சென்று சீலிங் ஃபேனை ஆன் செய்து விட்டு மீண்டும் அவள் தலையை துவட்ட வர,
YOU ARE READING
சுடர்வாய் தீபமே
Romanceஅனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவான...