மறக்காம கல்யாண சாப்பாடு சாப்பிட்டு போங்க மக்களே...
💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕குழுமையான காற்றோடு கலந்த அகல் சந்தனம் சாம்பிராணி மணங்கள் நாசியை துளைத்திட, அந்த மார்கழி பனியிலும் தலைக்கு குளித்து, பளபளக்கும் விஷேசத்திற்கு மட்டுமே அலமாரியை விட்டு வெளியே எட்டிப் பார்க்கும் பட்டுப்புடவைகளிலும், மின்னும் நகைகளிலும், வாசனை திரவியங்களை தோற்கடித்துவிடும் மல்லியும் முல்லையும் கூந்தலில் சூடியும், கொழுசுகலுக்கும் வளையல்களுக்கும் போட்டி போட்டது போல் ஆங்காங்கே ஒலித்த பெண்களின் கணீர் பேச்சும் கலகல சிரிப்பும் அம்மண்டபத்தை உயிர்ப்போடு வைத்து இருந்தது..
மணமகள் அறையில் பொம்மை போல் பேதைக்கு அலங்காரம் செய்து வைத்து விட்டு வெளியேறிய தோழிகளால் எவ்வளவு முயன்றும் அவளை சிரிக்க வைக்க முடியவில்லை..
அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தவள் எதிர் புறம் போட்டு இருந்த மேசையில் தலை சாய்த்திருந்தாள்..
கண்கள் கலங்கி தான் இருந்தன..இரண்டாவது முறை மணமகள் வேடம் தரித்து நின்ற மங்கைக்கு சிறிது நாட்களுக்கு முன் நிகழ்ந்த கசப்பான நினைவுகள் அவள் விரும்பாதே கண்முன் தோண்றி அவளை கலங்கடிக்க அயர்வாக இருந்தது..
ஏற்கனவே தவறானவனை காதலித்து அடிபட்டு போய் இருந்த மனதுக்கு இந்த திருமணம் உப்பை கொண்டு ரணமான மனதை தேய்ப்பது போலிருந்தது..
திருமண வாழ்கை தேவை தானா?? ஆண்கள் மட்டும்
காதலின் தோல்விக்கு மதுவை நாடி சென்று தன் கஷ்டத்தை மறக்க அதை மருந்தாக்கிக் கொள்கிறேன் என்று தங்கள் வருத்தத்தை ஊருக்கும் உறவுக்கும் காட்டிக் கொண்டு தங்களையே அழித்துக் கொள்ள, பெண்களாகப்பட்டவர்கள் காதலின் தோல்விக்கு மருந்தாக கிடைப்பதென்பதோ பிடித்தமேயில்லாத வேறொரு திருமண வாழ்கை தானோ??ஆண்களுக்கு அந்த காதலை மறக்க கிடைக்கப் பெற்ற அவகாசம் கூட குடும்பத்தால் பிணைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு கிடைக்கப் பெறுவதில்லையே..ஆணோ பெண்ணோ உண்மையாக காதலித்த இருவருக்குமே காதலின் வலி கொடிது தானே..
அதை ஏன் இந்த சமூகம் மறக்கிறது..
YOU ARE READING
சுடர்வாய் தீபமே
Romanceஅனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவான...