சுடர்வாய் தீபமே 🔥9 🔥

249 13 1
                                    

தளர்வாக பின்னலிட்டவள் துர்கா செல்வதற்கு முன்னால் தொடு‌த்து வாழையிலையில் சுற்றி  வைத்திருந்த முல்லைச்சரத்தை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்தாள்..

அதன் இலேசான ஆளை மயக்கும்  நறுமணத்தின்மேல் என்றும் காதல் கொண்டிருந்தவள், அதை நுகர,அவள்  அதரங்களும் தானாக விரிந்தன..

ஈவாவின் டாலும்(perfume), முல்லையும், அதை சூடியவளின் வாசமும் அப்போது தான் தாயையும் தங்கையையும் பேருந்தில்  வழியனுப்பி வைத்து விட்டு உள்ளே நுழைந்தவனை அவள் வசம் இழுத்தது..

மெல்ல அவளருகில் வந்தவன் பின்னிருந்து அன்று போல் அவள் வெற்றிடையை அழுத்த, மூச்சு முட்டியது தீபாவிற்கு..

தீபு.. கொல்றடி.. என்றபடி அவள் சூடியிருந்த முல்லையை நுகர்ந்தவன் அவள் தெளித்திருந்த வாசனை
திரவியத்தில் கிறங்க, தன் பிடியை இறுக்கினான்..

அவள் கழுத்தில் இதமாக இதழ் பதிக்க, கண்களை அகல விரித்து ஸ்தம்பித்து சிலையாக நின்றிருந்தவள் அவனின் இந்த அதிரடியில் வெளிபடையாகவே நடுங்க ஆரம்பித்துவிட்டாள்..

அதை உணர்ந்தவன், சிரித்தபடி அவளை தன் கைவளையிலேயே திருப்பி,

"என்னடா, நாலு நாளா சும்மா இருந்தவன் மறுபடியும் ஆரம்பித்திட்டான்னு நினைக்கிறியா?" என்ற அவள் நினைத்திருந்த கேள்வியையே கேட்க, அவள் விழிகள் மீண்டும் அகல விரிந்தது..

"அடியேய்.. அந்த மீடியம் சைஸ் பிஷ்ஷை இவ்ளோ பெருசா விரிக்காத.. பவுன் மாறி இருக்கு.. அப்புறம் ரோமேன்டிக் மூட் மாறி சிரிச்சிட போறேன்.. "என்று அவன் அவளை சிரிக்காமல் சீண்டினான்..

அவன் கிண்டலில் அவள் முறைக்க, அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது..

" அது ஒன்னும் இல்லை ஜஸ்ட் ப்யூ டேஸ் பொண்டாட்டி.. நீ சரீ கட்டினாவே ஒரு மாறி டெம்ப்டாகுது..அட்ரினலினும் டோபோமைனும் போட்டி போட்டுட்டு அளவில்லாம உடம்புல பாயிதுடி..அப்புறம் உன்னை என் கைக்குள்ள வெச்சுக்க சொல்லி உன் மனசு என்கிட்ட டெலிபதி மூலமா சொல்லியதா, அதான் அது சொன்னதை அப்படியே செஞ்சிட்டேன்.. "என்று பழியை அவள் மேல் போட்டபடி அவளை இன்னும் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டு அவன் நிற்க, அவன் கடைசியில் சொன்னதை கேட்டு துளிர்த்த கோபத்தோடு,

சுடர்வாய் தீபமேWhere stories live. Discover now