சுடர்வாய் தீபமே 🔥 11🔥

476 16 2
                                    

ஆதவன் ஆட்சி மறைந்து சந்திர பகவான் வானத்தில் பவனி வந்து தன் ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டு இருந்த இரவு சூழ்ந்த அவ்வேளை..

பிடிவாதமாக அமர்ந்து இருந்தவனிடம் அழுத்தக்காரி மெல்ல மெல்ல தோற்றுப் போய் விட்டாள்..

"துவி.. கிளம்பலாம்.. வாடா.." என்று எழுந்தவள் அவனை அழைக்க அவனோ கடலை வெறித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்..
பல்வேறு எண்ணங்கள் அவனை சூழ்ந்து மூழ்கடித்துக் கொண்டிருந்தது..

"துவி.. பிளீஸ் கிளம்பலாம் வாடா.. போய் சமைக்கனும்டா.. லேட் ஆகுது.. மார்னிங் ஆபீஸ் வேற இருக்கு.. "என்றவள் கிட்ட தட்ட கெஞ்சும் தோனியில் பேச,

"யாரும் எனக்கு சமைத்துக் கொட்ட வேண்டாம்.. என்னால இனி உனக்கு சிறு பிரச்சணை கூட இருக்காது பூ..ப்ச்.. சுடர்.. உன் இஷ்டப்படி இரு.. கூடிய சீக்கிரம் ஏதாவது இதற்கு முடிவு எடுக்கிறேன்.. வா.. "என்று வெற்றுப்பாய் பேசி விட்டு, கீழே கிடந்த சாவியை எடுத்துக் கொண்டு விறுவிறுவென துருவ் செல்ல தொப்பென்று சமைந்து அமர்ந்து விட்டாள் தீபா..

மனம் வலியில் தேங்கி கிடக்க இவன் பேச்சும் அதில் வேலைப் பாய்ச்சி அவளை உயிரோடு கொன்றது...
தறிகெட்டு ஓடிய மனதை பெரிதும் ப்ராய்த்தனப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவள் நிமிர்ந்து பார்க்க நன்றாக இருட்டி விட்டு இருந்தது..
அவளின் ஆருயிர் நண்பன், அவளின் முக பாவத்தை தத்தெடுத்துக் கொண்டவனாய் அமர்ந்து இருப்பதைக் கண்டதும் தான் சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த உரையாடல் பெண்ணவளுக்கு நினைவுவர அவனை அழைத்தாள்..
ஆனால் அவனோ எரிச்சலில் வார்த்தைகளை கொட்டிவிட்டு செல்ல அதைத் தாங்கும் உள்ளம் தன் சகியானவளுக்கு தற்போதில்லை என்று மறந்தது தான் அவன் எடுத்து வைத்த முதல் அடியின் சரிவாகியது..

பைக்கை அவன் முறுக்கும் சத்தம் இவள் காதைப் பிளக்க அதன் பிறகே நிஜம் வந்தவள் எழுந்து சென்றாள்..
அந்த அழகான பயணத்தில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை..
அழகான தருணங்களை உருவாக்கிக் கொள்வது மனிதனின் சாதுர்யம் தானே.. இயற்கை அன்னை எப்போதும் போல் அவள் கருணை மழையை தென்றலாய் தூவிக் கொண்டு தான் இருந்தாள்.. ஆனால் மனம் இல்லாது வெவ்வேறு மனநிலையின் தாக்கத்தில் உழன்று கொண்டிருந்தவர்களால் தான் அதை ரசிக்க முடியவில்லை...

சுடர்வாய் தீபமேWhere stories live. Discover now