மிதமான தென்றலோடு நர்த்தனம் புரிந்த குல்முகார் பூக்கள் சாளரம் வழி உள்நுழைந்து கட்டிலின் கீழ் ஆங்காங்கே சிதறிக் கிடக்க, இங்கோ அதை ரசிக்க வேண்டியவளோ கையிலும் காலிலும் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பரபரப்பாக சமைத்துக் கொண்டு இருந்தாள்..
முகம் நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதின் மகிழ்ச்சியை ஏந்திக் கொண்டு வலம் வர கையும் காலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது..
"ஐயோ அண்ணி..! என்ன டின்னர் மெனு இவ்ளோ வெரைட்டி வெரைட்டியா இருக்கு.." என்று அங்கு இருந்த வெஜ் நூடுல்ஸ், மசால் தோசை, வடை, பாயாசம் என்ற வகைகளைப் பார்த்து அதிசயித்துக் கேட்டாள் சீதா..
"நீங்க வருவீங்கன்னு தெரியாது சீத்.. அதான் சிம்பிளா முடிஞ்சளவுக்கு எல்லாருத்துக்கும் பிடிச்சதை செய்றேன்.. காலைல உனக்கு என்ன பிடிக்குமோ அதெல்லாம் செய்திடலாம்.." என்று உற்சாகமாய் பதில் சொல்லியவளுக்கு சோர்வேயில்லை.. சுறுசுறுப்பாக வேலையில் கண் பதித்துக் கொண்டு இருந்தாள்..
அவளின் முகத்தில் அரும்பியிருந்த புன்னகையைப் பார்த்து மகிழ்ந்தாலும் தங்களால் பணிச்சுமை கொடுத்த களைப்போடு அவள் வேலை செய்கிறாளே! என்ற வருத்தம் மேலோங்க வெளியே வந்த சீதா தாயிடம்," அண்ணிக்கு ஹெல்ப் பண்ணலாம்ல அம்மா.. அவங்க நிறைய டிஷ் செய்றாங்க.. போய் பாருங்க.. " என்று பயண அசதியில் மருமகள் கொடுத்த டீயைப் பருகி விட்டு அமர்ந்து இருந்த தாயிடம் வந்து குறைபட்டு அவரை செல்ல சொன்னாள் சீதா..
அவரும் உள்ளே சென்று எதற்கு இவ்வளவு செய்கிறாய் என்று செல்லமாக கோபித்துக் கொண்டாலும் அவள் தங்களுக்காக செய்வதைப் பார்த்து உள்ளம் குளிர்ந்து போனது அவருக்கு.. உதவி செய்கிறேன் என்று வந்தவரை மிரட்டல் விடுத்து வெளியே அனுப்பி வைத்தாள்..
வடைகளை சுட்டு வைத்தவள் கதவருகே நிழலாட, துர்கா என்று நினைத்துக் கொண்டு,
"அத்தை, உங்களை நான் வெளியே போய் ரெஸ்ட் எடுக்க தானே சொன்னேன்.." என்று போலியான கோபத்தோடு கையில் கரண்டியுடன் திரும்பியவள் அங்கு கதவில் சாய்ந்து நெஞ்சின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு அவளை ரசனை ததும்ப பார்த்துக் கொண்டு நின்ற துருவ் விஜயனை பார்த்து ஒரு நொடி திடுக்கிட்டாள்..
YOU ARE READING
சுடர்வாய் தீபமே
Romanceஅனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவான...