சுடர்வாய் தீபமே 🔥 16🔥

247 11 2
                                    

பரபரவென வறுக்கப்பட்டு பொன்னிறமாய் வெள்ளைக் குளியலில் நீந்திக் கொண்டு இருந்த சேமியாவை ஒரு கிண்டு கிண்டி அடுப்பை துர்கா அணைக்க பால்பாயாசத்தின் நறுமணம் நாசியைத் தீண்டியது.. ஒரு குவளையோடு தாய் முன் நின்று பல்லைக் காட்டிக் கொண்டு நின்றாள் சீதா..

"ஏண்டி பல்லைக் காட்டிட்டு நிக்குற? சாமிக்கு முதலில் வைத்துட்டு தான் உனக்கு.."என்றவர் ஒரு கிண்ணத்தில் பாயாசத்தை ஊற்ற,

"மம்மி ஜி.. இன்னிக்கு எனக்காக தானே ஸ்வீட் செய்ற.. அப்ப முதலில் எனக்கு தானே அதை சாப்பிட உரிமை இருக்கு.. இதுலயும் காட்க்கு முதல் உரிமையா?? நோ மாத்தாஜி.." என்று வாயில் எதிர்ப்பு தெரிவித்தாலும் கை அந்தக் கிண்ணத்தை பற்ற,

"நீயெல்லாம் வேலைக்குப் போறேங்கிறத இன்னும் என்னால நம்ப முடியலடி..இன்னும் சின்னப் பிள்ளை கணக்கா எல்லாத்துலயும் விளையாட்டுத்தனம் தான்.. "என்று அவர் நம்பாத பார்வை பார்த்து அங்கலாய்க்க,

"வீடு கட்டிட்டு தான் கல்யாணம் செய்துப்பேன்னு சொன்ன உன் பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டதை நம்புற தாய்க்குலமே..  நான் வேலைக்குப் போறேன்னு சொல்றதை மட்டும் நம்ப முடிலையா.. ஏன்? நான் எல்லாம் வேலைக்குப் போய் இந்தியாவை வல்லரசாக்க வேண்டாமா? என் கனவுக்கு குறுக்கே வந்தால் இந்த வீட்டை விட்டு வெளியேறதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை துர்கா.. "என்று தலையில் கை வைத்து நாடா பாணியில் விம்மி சொல்லியவளின் தலையில் கரண்டி கொண்டு துர்கா தட்ட எழும்பிய செல்ல சினத்தோடு தாயிடம் முறையிட்டாள்..

" ஏன் துர்கா? துர்கான்னு பேரு வைத்தா எனக்கு துர்க்கையாதான் நீ காட்சி புரிந்து அருளனுமா? இதே உன் அருமைப் பையன் வந்தால் மட்டும் அன்னப்பூரனி, சாந்த சொரூபியாய் மட்டும் காட்சியளிக்கிற.. எனக்கு ஓரவஞ்சனை காட்டுறல.. ஒருநாள் நான் இந்த வீட்டை விட்டுப் போனதுக்கு அப்புறம் பீல் பண்ணுவ.. "என்று முறுக்கிக் கொண்டு அவள் தொண்டை  வற்ற கத்த அங்கு துர்கா இல்லை..

சுடர்வாய் தீபமேWhere stories live. Discover now