சுடர்வாய் தீபமே 🔥23 🔥

134 9 0
                                    

இந்நேரம் வரை குடியேறி இருந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த நொடியிலேயே துருவ் விஜயனுக்கு மறைந்து போனது..

தனது முதல் ஆசான்,தனது முதல் கதாநாயகன், தனது முன்மாதிரி என்று இந்நாள் வரை யாரைக்  கருதி  இருந்தானோ தற்போது அவர் செயலாலேயேச மனம் நொந்து போய் நின்றான்..

தங்களிருவரையும் ஏற்ற்றுக் கொள்ள கௌரவம் தடுக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்..அதற்கு காலம் எடுக்கும் என்று பொறுமை காத்துக் கொண்டு தானே இருக்கிறான்..
அனால் அவரின் உயிரானா மகளை ஏன் இப்போது கஷ்டப்படுத்துகிறார்?அவளுக்கு ஏன் தேவையில்லாத வருத்தத்தை கொடுக்கிறார் என்று மனம் வருந்தியவன் அவரிடம் தெளிவாக பேசி எப்படியும் சீதாவை இங்கிருந்து அழைத்துச் சென்று அவளுக்குப் பிடித்த வேலையில் சேர்த்து விட வேண்டும் என்ற முடிவோடே வந்திருந்தான் தமையனாய்..

வாசலில் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவர் தனது நகலாய் நிமிர்வோடு வந்து நிற்பவனைப் பார்த்து உள்ளம் பாசத்தில் ஆழ்ந்தாலும் அவரின் பார்வை வாசலைத் தொட்டது.. அவரின் செய்கையின் பொருளை புரிந்து கொண்டவன்,

"உங்க மருமகள் வரலைப்பா" என்றான்.. அவனை ஒரு பார்வை பார்த்தவர் எதுவும் பேசாது எழுந்து உள்ளே செல்லப் போக அவரின் அருகே வந்து நின்றவன்,

"எப்படி இருக்கீங்கப்பா?" என்றான்.. நெடு நாள் கழித்து சந்தித்ததால் துளிர்விட்டிருந்த கோபத்தை மீறி அன்பு ஆழியாய் அவனை ஆட்சி செய்திருந்தது..

" நீ கல்யாணம் என்ற பிரச்சணையை இழுத்துட்டு வராத வரை நல்லா தான் இருந்தோம்டா குடும்பமா.." என்றார் குத்தலாகவே..
வலித்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாது நேராக கேட்க வந்த விஷயத்தை கேட்டு விட்டான்..

அவரோ என் பொண்ணை அனுப்ப எனக்கு விருப்பமில்லை என்று உறுதியாக நிற்க வாக்கு வாதம் வளர்ந்தது..
அவன் நிதர்சனத்தை எடுத்து உரைக்க அவன் பேச்சில் எதிர்ப்பை உணர்ந்தவர் கோவம் எங்கோ வலியில் உழன்று கொண்டு இருந்த சுடர் புறம் திரும்பியது..

சுடர்வாய் தீபமேWhere stories live. Discover now