சுடர்வாய் தீபமே 🔥17 🔥

275 11 5
                                    

செஞ்சூரியன் தணிந்து விட்ட போதிலும், வெப்பத்தை மெருகேற்றி தன் உயிர் மூச்சு கொண்டு தன்னவளின் வதனத்தில் படரவிட்டான் துருவ் விஜயன்..

கூர் விழிகளில் குறும்பு கொட்டிக் கிடக்க, பேதையவளின் நிலமை தான் பனிமேல் நின்று நெருப்பை ஸ்வாசிப்பது போல் தவிக்க உடலோ சில்லிட்டிருந்தது..

"விடு விஜய்.." என்று எங்கோ ஒலித்த சந்திரனின் ஒலிப்பெருக்கியின் ஓசையில் மாய வலையில் இருந்து விடுபட்டவள் சுற்றம் உணர்ந்து பதறிய விழிகளோடு அவன் கையை எடுத்து விட முயற்சிக்க அவனோ அவள் தவிப்பை ரசித்து இன்னும் பிடியை இறுக்கினான்..

அவள் கால்கள் அவன் காலில் அழுத்திக் கொண்டு இருக்க அவன் மேல் சரிந்து விடாதவாறு பெட்ரோல் டாங்கை கெட்டியாகப் ஒரு கையால் பிடித்துக் கொண்டவள் மறு கரத்தால் அவன் கையை விடுவிக்கப் போராடினாள்..

"விஜய்.. இது உன் பெட்ரூமில்ல.. நாலு பேரு நடக்கிற இடம்.. என்ன விஜய் இப்படி பண்ற.. விடு.." என்று அவனை சாடியபடி வேகமாக அவன் கையை தன் இரு கரம் கொண்டு விடுவிக்க முயல அவன் இழுத்த இழுப்பில் அவன் நெஞ்சம் சரிந்தவளைப் பார்த்து மையலானான்  விஜயன்..

வெய்யில் முகத்தில் பட்டுத் தெறிக்க காற்றில் ஆடும் கருங்கூந்தலில் கார் முகில் வண்ணனவன் கிறங்கிப் போய் இருந்தான்..

"பெட்ரூம்னா ஓகேவாடி?" என்று அவள் கன்னத்தில் கன்னமுடியை அழுத்திக் காதில் கிசுகிசுப்பாக கேட்க, இருந்த கோவத்தில் ஒரே தள்ளாக தள்ளி விட்டு அவள் விலகிக் கொள்ள இடது காலில் பைக்கை சமன் செய்து இருந்தவன் நிலையாய் நின்று கொண்டான்..

சிலிர்த்த உடலை மறைத்தவள் குரலில் கடுமையை ஏற்றிக் கொண்டாள்..
"துவி.. இது என்ன விளையாட்டு?? நடுரோட்ல என்னடா பண்ற?? "என்று கோவம் கொப்பளிக்க வினவியவள் மறுமுறை சுற்றிப் பார்த்து விட்டு யாரும் இல்லை என்று உணர்ந்த பிறகே சற்று ஆசுவாசமானாள்..

"நான் என்னடி பண்ணேன்??" என்று எதையும் செய்யாத பாவனையில் அவன் வினவ பல்லைக் கடித்தாள் சுடர்..

சுடர்வாய் தீபமேWhere stories live. Discover now