சுடர்வாய் தீபமே 🔥 20🔥

133 9 1
                                    

வேகமெடுத்து வந்து தீண்டும் மென்காற்றும் சற்று நின்று போய் விட்டது போன்று இருந்தது அநீஷிற்கு...நெஞ்சுக்கூடு உள்ளிழுத்த காற்றை வெளியேற்ற மறந்து அடைத்து போய் நிற்க அதிர்ச்சியாக வேண்டியவனோ
எந்த ஆர்பாற்றமும் பதற்றமும் இன்றி அமைதியாய் நிற்க இன்னும் திக் திக் என்று திகில் கூடியது அந்த நல்ல உள்ளம் நிறைந்த அப்பாவிக்கு ...

"ஹலோ அம்மா" என்று சுடர் அழைக்க ,

"ஹலோ தீபா",என்று மறுபுறம் பதிலுரைத்த வளர்மதியின் குரல் கேட்கும் முன்னரே அழைப்பு துண்டிக்கப்பட்டது மரகதத்தால்..

"ஏண்டி நேத்து அந்த ஆட்டக்காரி புருஷன் வந்து அவமானம் படுத்தினது பத்தாதுன்னு நீ இப்ப அவளுக்கு வேற போன் பண்றியா?..உனக்கு இந்த வீட்டுல சோறு கூட சரியா போடாத மாதிரி உன் மவ அந்த திமிர் பிடிச்சவன்கிட்ட மளிகை சாமானம் இதர செலவுக்கு பணம் கொடுத்து அனுப்புறதும் நீ வேண்டாம்னு நாடகம் ஆடுறதும்.. எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா?.என்ன
என்னையும் என் பையனையும் அவமானபடுத்துறதுக்கு அம்மாளும் பொண்ணும் திட்டம் போடுறிகளோ?? என்னமோ பெருசா பேசுன என் பையன் வாங்கிப்போடுறதுல தான் சமைகிறேன்னு..இப்ப மட்டும் எதுக்கு டி உன் புள்ளைட்ட கொடுத்து அனுப்ப சொல்லுற ?ருசி கண்ட நாக்கு வகை வகையா கேக்குதா? கல்யாணமான பொட்டச்சிட்ட வாங்கி சாப்பிட அசிங்கமா இல்லையா?"என்று
கேட்டவர் தானும் இன்னும் தன் மகன் வருமானத்தில் தான் உண்டு கொண்டு மருமகள் மற்றும் பேத்தி வாழ்க்கையை கெடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்று உணரவில்லை...

அவர் பேச்சில் பொங்கி வந்த கோபத்தை வார்த்தை என்ற வடிகால் கொண்டு திருப்பிக் கொடுத்தார் வளர்மதி...

"என் பொண்ணுட்ட வாங்கி சாபிடுறதை நீங்க எப்படி கேவலம்னு சொல்லுவீங்க?எனக்கு பையனும் அவள்தான்..பொண்ணும் அவள்தான்..உங்களை மாதிரி பையன் சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட நான் ஏன் வெட்கப்படனும்?"என்று பொறுமையை முகத்தில் தேக்கி அழுத்தமாக கேட்டவரின் கண்கள் மட்டும் சீற்றத்தை வெளிக்காட்ட மறக்க்கவில்லை...

சுடர்வாய் தீபமேWhere stories live. Discover now