சுடர்வாய் தீபமே 🔥 19🔥

129 7 1
                                    

புலர்ந்தும் புலராது, குளிரை பரப்பிக் கொண்டு இருந்த காலை வேளையில் அடுப்பில் இருந்து எடுத்து இறக்கிய சுடு தண்ணீரை வாளியில் ஊத்தத் தெரியாது இரண்டு இடுக்கிலும் கரித்துணியைப் பிடித்துக் கொண்டு அதை வாளியில் ஊற்ற முயன்றாள் தீபா.. ஆனால் சூடு தாளாது அதை அப்படியே வைத்து விட்ட பாவைக்கு ஆற்றாமையும் தாயின் நினைவுகளும் ஒருசேர வந்து அவளை வாட்டி வாட வைத்தது...

"சுடு தண்ணி கூட எடுத்து பழக மாட்டியா தீபா?" என்று கடிந்தபடியே தண்ணீரை எடுத்து வாளியில் ஊற்றினார் வளர்மதி..

"முகத்தில ஆவி அனலா அடிக்குது.. சுடுதுமா" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தோளிலிருந்து நழுவிய துண்டை மீண்டும் பிடித்தவாறு சொன்னாள் தீபசுடர்..

அவரோ வளர்ந்தும் குழந்தையாய் நிற்பவளை எண்ணி பெருமூச்சுவிட்டார்.. அவள் தேவைகள் அனைத்தையும் வளர்மதியே வீட்டில் பார்த்துக் கொள்வார்.. தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் கண் போல பார்த்துக் கொண்டார்..
தந்தையின் இடத்தை ஈடு செய்ய முடியவில்லை என்றாலும் அவளுக்குத் துளியும் கஷ்டம் தராது முடிந்த அளவில் அவள் தேவைகளை அவரே செ‌ய்து கொடுப்பார்..
அதனால் தான் தந்தை என்ற ஏக்கம் உள்ளே இருந்த போதும் வளர்மதியின் செயலில் தந்தையின் இடத்தையும் அவருக்கே பெரும்பாலும் கொடுத்து விட்டாள் அவள்..

தீபசுடர் ஆண் போலவே வளர்ந்தாள் என்றே சொல்ல வேண்டும்.. சமையல் நுணுக்கங்கள் அவளுக்கு அவ்வளவாக தெரியாது என்பது தான்  மெய்.. அவள் பாத்திரம் துலக்குவாள், துணி துவைப்பாள்,வீடு பெருக்குவாள்.. மற்றபடி சமையல் தேவை என்றால் மட்டுமே சில எளிய உணவுகளை சமைக்குமளவுக்குக் கற்றிருந்தாள்.. பெரும்பாலும் படிப்பிலேயே நேரம் செலவழித்தவள் சமையலையும் சுடு பாத்திரத்தைக் கையாள்வதையும் கற்றதில்லை..

" அது ரொம்ப சுடுது..அதான் நீ இருக்கியே மா..எடுத்து ஊத்திடுறல" என்று வீம்பாக சொல்லி விட்டு சென்றாலும் நாளை இவள் என்ன செய்யப்போகிறாளோ என்று பெருமூச்சு விட்டபடி வளர்மதி வேறு வேலையில் கவனமானாலும் அந்தத் தண்ணீரில் குளித்து விட்டு வருபவளுக்கு,

சுடர்வாய் தீபமேWhere stories live. Discover now