சுடர்வாய் தீபமே 🔥5 🔥

292 20 2
                                    

ஹலோ நட்பூஸ்..
இந்த கதைக்கு நீங்க தருகிற ஆதரவிற்கு மிக்க நன்றிகள்..
கமெண்ட்ஸ்ல சூப்பர் நைஸ்ன்னு போடுறீங்க..ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் நீங்க கமெண்ட்ஸ் போட்டதுக்கே பெரிய பெரிய நன்றிகள்...அதுக்கு பதிலா கதை பற்றி இரண்டு லைன் எனக்காக நேரம் எடுத்து டைப் செய்து போடுறீங்களா?..  ஒரு கதையை இப்படி எல்லாம் கொடுக்கலாம்ன்னு யோசிக்கிறப்ப, அதுக்கு வர கமெண்ட்ஸ் வைத்து தான் அதை தொடர்ச்சியா கொடுக்க தோன்றும் எனக்கு.. அதுக்காக எடுத்த கதையை முடிக்க மாட்டியான்னு கேக்குறத புரிது..

இந்த கதை எவ்வளவு தூரம் உங்களை ஈர்த்திருக்கு இதை பற்றி நீங்க என்ன பீல் பண்றீங்க, இது மாதிரி கேரக்டர்சோ சம்பவவங்களோ நீங்க பார்த்து இருக்கீங்களா?இதை பற்றி தெரிந்துக்க தான் எனக்கு ஆர்வம்.. கமெண்ட்ஸ் மட்டும் தான் எனக்கு ஊக்கம் கொடுக்கிறதா இருக்கும்...சோ கதை பற்றி கமெண்ட்ஸ் வரும்னு நம்புறேன்.. Tq ❤️ ❤️

தன்னை எச்சரித்து விட்டு செல்லும் இளாவைப் புருவம் சுருங்க பார்த்து நின்றான் துருவ்..

"என்ன சொல்லிட்டு போறான் இந்த இளா?? கை தவறி விடல.. ஆசைப்பட்டதால விலகி இருக்கேன்னு சொல்றான்? யார் ஆசைக்காக?? எனக்கு தெரிந்து இவன் பிடிவாதக்காரனாச்சே.. என்னை அந்த வீட்ல பிடிக்காத இரண்டு ஜீவனுக்கு என் ஜஸ்ட் நவ் பொண்டாட்டியையும் பிடிக்காதே.. இதுல அந்த தாய்க்கிழவிக்கு சுடர்னா சுத்தமா ஆகாது.. ஆனால் இளா மேல கொள்ளை பிரியம் வைத்திருக்கு.. நிச்சயம் சுடரை இளாக்கு கல்யாணம் செய்து வைக்க எதிர்ப்பு தான் தெரிவி்த்திருக்கும்.. ஆனால் ஹிட்லர் மதில் மேல் இருக்கும் பூனை போல் தானே.. அதனால் அவர் என்ன சொல்லி இருப்பார் என்றும் யூகிக்க முடியாது.. இதில் விந்தை என்ன என்றால் இவர்கள் எதிர்ப்பு முன் அவன் பிடிவாதம் தானே ஜெய்க்கும்.. இருந்தும் எவ்வாறு இவன் எங்கள் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டான்.. யார் இவன் மனதை மாற்றியது?? "என்று குழம்பிப் போனவன் கண்களில் பட்டார் வளர்மதி..

" ஆண்ட்டி.. ச்சை.. அத்தை.. அத்தை.. "என்று அங்கு விருந்தினரை சாப்பிட அழைத்து சென்று கொண்டிருந்த வளர்மதி அருகில் விரைந்தான்..

சுடர்வாய் தீபமேWhere stories live. Discover now