இயந்திர மயமாக வேலை செய்து கொண்டிருந்தனர் அந்த கட்டிடத்தில் பணியாற்றுபவர்கள்..
வயது பாகுபாடு, வேலையில் இல்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையாக அனைத்து வயதினை சார்ந்தோரும் கணினியிலும் கோப்புகளிலும் தங்களை புதைத்துக் கொண்டு இருக்க, அழைப்புக் கடிதத்தோடு உள்நுழைந்தாள் தீபா....
ஒருமுறை அங்கு வேலை செய்பவர்களை சுற்றிப் பார்த்தவளுக்கு தானாகவே ஆர்வம் ஒட்டிக் கொண்டது..
இனி தானும் அங்கே ஒரு அங்கமாகப் போகிறோம்.. சம்பாதிக்கப் போகிறோம் என்ற உற்சாகத்தோடு மேனேஜரை சந்தித்தவளுக்கு வாழ்த்துக் கூறி இனி திறம்பட பணியாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தலோடு விடை கொடுத்தார்..அங்கு பணி புரியும் காரியதரசியான பரத்திடம் அவளை துவியிடம் பயிற்சியளிக்குமாறு சொல்ல சரி என்று அவனும் வெளியே வந்தான்..
அவனைப் பின் தொடர்ந்து வெளியே வந்த தீபாவும் மிகுந்த ஆர்வத்தோடு எந்த இருக்கைத்தனக்கானதாக இருக்கும்? எத்தகைய வேலை இன்று தனக்கு நியமிக்கப்படும்? என்ற ஆர்வத்தோடு அவன் பின்னால் வந்தாள்...
"மிஸ் சீரா, வேர் இஸ் விஜய்?" என்று அவன் அருகில் அமர்ந்து இருக்கும் சீராவிடம் பரத் வினவ,
"நோ ஐடியா, பரத்.. ஹி வோண்ட் டேக் அ டே ஆஃப்.. பட் இட்ஸ் அ வொன்டர், தட் வொர்க்ககாலிக் ஹேசின்ட் அரைவுட் யேட்.." என்று ஆச்சர்யத்தை காட்டி சொன்னவள், அருகில் நின்றிருந்த தீபாவைப் பார்த்து,
" நியூ ஜாயினி?" என்று கேள்வியாய் நோக்க,
" எஸ் மேம்" என்றாள்..
அவளின் மேம் என்ற விழிப்பில் சிரித்த சீரா,
" நோ நீட ஆஃப் தட் அன்வான்டட் ரெஸ்பக்ட்.. கால் மீ சீரா.." என்று புன்னகைத்தவாறே சொல்லியவளை பிடித்துப் போனது தீபாவிற்கு.."தீபசுடர்.." என்று அவள் கை நீட்ட அதைப் பற்றிக் குலுக்கினாள் சீரா..
" சுடர்.. இஸ் தட் பி ஃபைன் வித் யு?" என்று சிநேகமாய் புன்னகைத்து வினவ வேகமாக ஆம் என்று தலையசைத்தாள்..
BẠN ĐANG ĐỌC
சுடர்வாய் தீபமே
Lãng mạnஅனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவான...