1 காதலன்
கிருஷ்ணன் லெதர் எக்ஸ்போர்ட்ஸ்ஸில் குறுகிய காலத்தில் வளர்ந்துவரும் தொழில் அதிபர். அப்பா ஆரம்பித்த தொழிலாக இருந்தாலும் தனக்கான தனி பெயரை தொழில் சாம்பிராஜயத்தில் பொறித்திருந்தான்.
கடுமையான முகம் கொண்டவன், அதற்க்காக அனைவரிடமும் எரிந்து விழும் ரகம் இல்லை அவன்.
அவனது பார்வையின் ஒரு முறைப்பு போதும் அவனின் கீழிருக்கும் வேலையாட்களை மிரட்ட.
“இன்று அனுப்ப வேண்டிய லோட் அனுப்பியாச்சா?”
“வண்டியில் ஏத்திட்டு இருக்காங்க சார்”
அவனது வேகத்துக்கு நடக்க முடியாமல், ஐந்தடியில் அவனுக்கு இணையாக ஓடித்தான் வர முடிந்தது, அவனது அசிஸ்டன்ட் அனுவால்.
அவளுக்கு வேலை செய்து தான் வாழவேண்டும் என்ற நிலை இல்லாவிட்டாலும், அனுவின் தந்தை கண்டிப்பானவர். பெண் பிள்ளையை தன் காலில் நின்றால் தான் சமூகம் மதிக்கும், அவளுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும் என்ற தொலைநோக்கு சிந்தனை உடையவர்.
தன் நண்பனின் மகனிடம் தொழில் நிர்வாகம் கத்துக்க அனுப்பிவிட்டு மனைவியுடன் கோயில் குளம் என்று சுத்தப்போயாச்சி.
அனு பேய்யிங் கெஷ்டாக கிருஷ்ணா வீட்டின் மேல் தளத்தில்தான் தனியாக சமைத்து துவைத்து தனக்கான வேலையை கற்றுக்கொள்கிறாள்.
இவளை தனியாக வைத்தது அனைத்தும் அனு அப்பாவின் மாஸ்டர் பிளானில் அடங்கும்.
மனைவி செல்லம் கொடுத்து கெடுத்த தன் பெண்ணை திருத்தவே இந்த முயற்சி. பார்ப்போம் இருவரில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று வேலைக்கு சேர்ப்பதை பற்றி அனுவின் தந்தை சொல்லும்போது, ‘அவனை படுத்தும் பாட்டில் என்னை விரட்டிவிடுவான்’ என்று நினைத்தவளின் நிலை தலை கீழாக மாறப்போவது அவளுக்கு தெரியவும்யில்லை.
அனு யாருக்கும் பயப்பட மாட்டாள், வாய் ஜாஸ்சி, ஆனால் கிருஷ்ணாவிடம் அடங்கி போவாள் அவனது உருவம் அத்தகையது.