29

1K 19 9
                                    

29

உள்ளே வந்ததும் ராதாக்கும் அனுவுக்கும் ரகுவரன் வாங்கி வைத்திருந்த புடவை நகைகளை கொடுக்க, இருவரும் ஒரே அறையில் புகுந்து கொண்டார்கள்.

அனு முகத்தில் இருந்த சோகத்தை பார்த்த ராதா.

‘இப்போவாது உண்மை சொல்லுறாளா பாரு கல் நெஞ்சக்காரி’

"சாரி அனு எனக்கு முன்னவே தெரிந்து இருந்தா கிருஷ்ணாவை கல்யாணமே செஞ்சி இருக்க மாட்டேன்"

"ஏய் விடு முடிஞ்சதை பத்தி பேசிட்டு, எல்லோரும் என்ன பிடிச்சவங்களையா கல்யாணம் செஞ்சிக்கிறாங்க சொல்லு, அதை விடு நான் உன்னை ரெடி செஞ்சி விடுறேன்"

அனு தன் கையாலேயே ராதாக்கு பார்த்து பார்த்து தயார் செய்தாள்.

திருமண அலங்காரத்தில் ராதா தேவதையாக ஜொலித்தாள்.

"கல்யாண பொண்ணு ரெடி" அனு தானும் தயாராக துவங்க.

"அனு ஒன்னு கேட்கட்டா?"

"என்ன மேடம் புதுசா பர்மிசன் எல்லாம் கேட்குறிங்க, கேளுடி கழுதை”

"அது வந்து எப்போ இருந்து அவரை லவ் செய்யுற"

"அது எதுக்கு தேவையில்லாத குப்பை, நீ போ மேடைக்கு நேரம் ஆகிடுச்சி"

"இல்லை நீ தயாராகும் வரை நானும் இருக்கேன், நீ சொல்லு"

"சொல்ல மாட்டேன்னு சொன்னா  விடவா போற அது பப்பி லவ் டி, முதலில் பார்க்கும் போதே பிடிக்கும். அதான் அப்போ இருந்து அண்ணான்னு கூட சொல்லலை, உங்க இரண்டு பேரோட பாசத்தை பார்த்துதான் எனக்கு அவரை பிடிச்சிடுச்சி. சின்னதுல தெரியாது இது தான் லவ்ன்னு, வளரவளர அவரை பார்க்காம எனக்கு தூக்கமே வராது. அவர் காலேஜ் போகும் போது, என்னை அறியாம கண்ணீர் வந்தது. அப்போ தான் தெரிந்தது இது தான் லவ்ன்னு. அவர் விருப்பம் கேட்டுட்டு உன்கிட்ட சொல்லாம்ன்னு தான் உன்கிட்ட சொல்லலை. காலேஜ் போய் சொல்லலாம்ன்னு பார்த்தா‍ கிருஷ்ணா பாஸ் செய்த சதியால் ஆளுக்கு ஒரு மூலையில் போய் படிக்க ஆரம்பிச்சிட்டோம்"

மனைவியின்...காதலன்!Where stories live. Discover now