23

239 11 6
                                    

23 காதலன்!

ச்சே எப்படி... இவனை சமாளிப்பது, வயிறு வேற கத்துது.

அந்த பிரியாணியையும் சிக்கனையும் வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டு இருந்தாள்.

சாப்பாட்டை விட கிருஷ்ணாவை சமாதானப் படுத்துவதுதான் முக்கியம், என்று அமைதியாக பிரியாணியை வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டு இருந்தாள்.

கிருஷ்ணா... அருகில் வந்தவன்.

“சாப்பிடுறது என்றால் இப்பவே சாப்பிட்டுக்கோ”

“எனக்கு தேவையில்லை, உனக்கு வேணும்னா நீ சாப்பிட்டுக்கோ”

“சரி நாய்க்கு போட்டுடறேன்”

பிரியாணியையும் சிக்கனையும் எடுத்துக்கொண்டு சமையல் அறைக்குள் போனான்.

“பாவி பையன் எடுத்துட்டு போய்ட்டான், வடப் போச்சே, பசிக்குதே இப்போ என்ன செய்யலாம்” கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் வெளியே வந்தவன், “ராதா எந்திரி”

“எனக்கு பசி மயக்கம் எழ முடியலை” காலை ஆட்டிக்கொண்டே படுத்து இருந்தாள்.

“எழு டா” அவளை கைபிடித்து எழுப்பி விட்டவன் கையில் தட்டோடு தரிசனம் தந்தான், அதை பார்த்தவுடன் ராதாவின் கண்கள் மின்னியது.

“இந்தா சாப்பிடு”

‘ராதா உன் வீராப்பை விட்டுடாத, இவன் உன்னை எப்படி கடுப்பு கிளப்பினான், இவனை விடக்கூடாது’

“உனக்கு வேணுமா வேண்டாமா?”

“ஒன்னும் வேண்டாம்”

“சரி நான் சாப்பிட்டுக்கிறேன்” சூடு செய்து வந்து பிரியாணியையும் பெப்பர் சிக்கனையும் ரசித்து ருசித்து சாப்பிட்டான்.

‘கடவுளே நான் என்ன பாவம் செஞ்சேன், என் சிக்கன்... என் ஆட்டு பிரியாணி, அச்சோ போச்சே... போச்சே. காட்டுப் பன்னி போல சாப்பிட்டுட்டு இருக்கான். ஒரு பொட்டலம் காலி, அடுத்ததை பிரிக்கிறானே, என் பிஞ்சி மனசு வெடிச்சிடுச்சே’ வாயில் எச்சை ஊர அவனை பார்த்தாள்.

மனைவியின்...காதலன்!Where stories live. Discover now