3… காதலன்
“என்ன சார் இரண்டு வாரம் ஆகப்போகுது இப்படி நடு ரோட்டில் வந்து உட்கார்ந்துட்டிருக்கோம்”
“உனக்கு சம்மர் செலபிரேட் செய்யலையே’ன்னு கவலை, எனக்கு என் வாழ்க்கை எஞ்சாய் செய்ய முடியலை’ன்னு கவலை”
“ஏன் சார், என் பிரண்ட் உங்களை நல்லா பாத்துக்கறது இல்லையா”
“செமையா பாத்துக்கறா, அதான் இரண்டு வாரமா பாத்திட்டு இருக்க இல்ல” சளிப்பாக சொன்னான்.
“ஹா ஹா விடுங்க பாஸ் அவதான் விளையாட்டு பிள்ளைன்னு தெரியுமில்ல”
“நல்ல விளையாட்டு பிள்ளை தான்”
“ஆமா ரொம்ப விளையாட்டுபிள்ளை” அருகிலிருந்த தள்ளு வண்டியிலிருக்கும் ஜிலேபியை வாங்கிக்கொண்டு இருவரும் உட்கார.
“அனு அது மாதவகண்ணன் போல இருக்கு”
“என்ன சார் சொல்லுரிங்க, அப்போ என் சம்மர் லீவ் கண்பார்ம்” சந்தோஷத்தில் வாயில் இரண்டு இனிப்பு சேர்த்து அழுத்தினாள் அனு.
“சரி வா பாலோ செஞ்சிட்டு போவோம்”
“நீங்க முன்னாடி போங்க சார் உங்களை பின் தொடர்ந்து வந்திடுறேன்” சாப்பிடுவதிலேயே குறியாக இருந்தாள்.
ஒருவழியாக நாயா பேயா இரண்டு அப்பாவி ஜீவன்களும் அலைந்து திரிந்து கண்டுபிடிக்க.
இடையில் மீண்டும் அந்த மாதவக்கண்ணனை தொலைத்துவிட்டனர், அந்த ஜன நெரிசலில்.
மாதவன் ஒரு கடையில் இருந்து வெளியே வருவதை பார்த்த கிருஷ்ணா.
“அனு தேடி வந்தவன் கிடைச்சிட்டான்”
கிருஷ்ணா சொல்வதை எல்லாம் காதில் வாங்கும் நிலையில் இல்லை அனு.. ஜிலேபியை தின்றுகொண்டே கிருஷ்ணாவை பின் தொடர்ந்தாள்.
“பாஸ் நீங்க போங்க.. உங்களை பின்தொடர்ந்து வரேன்”
கடையில் சாப்பாடு வாங்கி உள்ளே நுழைந்த மாதவன் திரும்ப வரும்போது இருவர் முகத்தையும் பார்த்தான்.