13 காதலன்!
ராதா இவ்வளவு நேரம் வெளியே பேசினாலும் வெளி ஆட்களிடம் பேசுவதில் ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்தது.
அதும் அவனுங்களை பார்த்தால் தடி தடியாக இருந்தார்கள், “அது எல்லாம் சொல்ல முடியாது வழியை விடுங்க”
“பாருடா… மேடம் நிம்மதியா இந்த காலேஜில் படிக்க கூடாதுன்னு நினைக்கிறிங்க போலவே” ஒருவன் சொல்ல.
இன்னொருவன், “டேய் என்ன பேச்சி வார்த்தை நடத்திட்டு இருக்க நாங்க சொல்லுவது செய்யலைன்னா…உனக்கு தான் பிரச்சனை”
“என்ன பிரச்சனை நான் ஸ்டாப் கிட்ட சொல்லிடுவேண்”
“அது எல்லாம் இங்கே செல்லாது இன்னைக்கு செஞ்சிட்டா உன்னை விட்டுடுவோம் இல்லைன்னா இந்த வருஷம் முடியும் வரை டெய்லி ரேகிங் தான்”
‘எது, டெய்லியுமா? இவனுங்க என்ன பொசுக்குன்னு அவர் கிட்ட போய் அத்தான் பெத்தான்னு சொல்ல சொல்லுறாங்க ஐயோ, முதல் நாளே அமோகமா இருக்கே என்ன செய்ய நான்’
“என்ன மா ஏதோ யோசனையில் இருக்க” ஒருவன் சொல்ல,
“என்ன நீ தான் தைரியமான ஆளாச்சே அத்தான் லவ் யூ சொல்லிட்டு வா” இன்னொருவன்.
“முன் அத்தான் மட்டும் தானே கூப்பிட சொன்னிங்க இப்போது என்ன, ஐ லவ் யூ சொல்ல சொல்றிங்க, இது சரி இல்லை பின் விளைவு பெருசா இருக்கும்”
“சரி சரி… அந்த பின் விளைவை சந்திக்க நாங்க தயார் அப்படிதானங்கடா”
“ஆமா தலை” மற்றவர்கள் சொன்னவனுக்கு பின் கோசம் போட.
“சொன்ன உடனே போய் இருந்தா, அத்தான் மட்டும் சொல்லிட்டு நீ பாட்டுக்கு போய் இருக்கலாம், நீ லேட் செஞ்சதால இப்போ ஐ லவ் யூ சொல்ல சொல்றோம். இன்னும் லேட் செஞ்சா கல்யாணம் செஞ்சிக்க சொல்லி கேட்க சொல்லுவோம், என்ன சொல்லுற? இப்போவே போறியா இல்லை இன்னும் எதாவது எதிர் பார்க்கிறியா”
“ஐயோ! கல்யாணமா! ஆளை விடுங்க நா கிளாஸ்க்கு போறேன்”
“கிளாஸ்க்கு போய்டுவியா நீ போய் பாரு அப்போ தெரியும் சீனியர்ஸ் பவர்”