24...காதலன்!ஆளுக்கொரு பேக் பேக் தண்ணி மதிய உணவு ஸ்னேக்ஸ் என்று எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். வரப்போர ஆபத்து தெரியாமல், மூவரும் உற்ச்சாகமாக கிளம்பினார்கள்.
தாரகை நிறைய முறை போய் வந்ததால் நீங்களே போய்ட்டு வாங்க என்று சொல்லிவிட.
மூவரும் கிளம்பினார்கள்.
ராதா தனியாக நடந்து வர... அனு மாதவனிடம் கதை அளந்துகொண்டே வந்தாள்.
ராதா சுற்றி இருக்கும் பசுமை சூழலையும்... வித விதமான பறவைகளையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்தாள்.
'இன்னும் ஒரு நாள் தான் இருக்குமாதவன், அதுக்கு அப்புறம் நிம்மதியா மீண்டும் உன் வாழ்க்கையை வாழ போய்டலாம். இந்த அனு தொல்லை தான் தாங்க முடியலை, இதுல மேடம் கோச்சிக்கிட்டு சுத்திட்டு இருக்காங்க முடியலை இவங்க தொல்லை. கிருஷ்ணா ஐ மிஸ் யூ... சீக்கரம் வாடா' மனதில் நினைத்தவள்.. அந்த காட்டின் எல்லைக்கு போக... அங்கு ஒரு சிறு ஓடை ஓடிக்கொண்டு இருந்தது, ராதா தண்ணீயை பார்த்ததும்... இறங்கி ஆட்டம் போட.
அனுவும் மாதவனும் இன்னும் தங்களது பேச்சை முடிக்கவில்லை.
என்னதான் ராதா விளையாடிக் கொண்டு இருந்தாலும்... அவளது பார்வை முழுவதும் மாதவன்மீது தான் இருந்தது.
'கண்ணா... நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேண் எப்படி உனக்கு என்னை பிரிஞ்சி இருக்க முடியுது. உன்னை நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்காம விட மாட்டேன்டா'
அங்கிருந்து அனைவரும் கிளம்பி வரும் போது, வழக்கம் போல மாதவனும் அனுவும் பேசிக்கொண்டே முன் செல்ல, ராதா அங்கு இருக்கும் இயற்க்கை செல்வங்களை நிழல் படம் பிடித்துக்கொண்டு வந்தாள்.
முக்கால் வாசி தூரத்தை கடந்ததும்...இரண்டு கருப்பு உருவம் ராதாவை கடத்திக் கொண்டு காட்டின் எல்லைக்கு போனது.
அனுவுடன் பேசிக் கொண்டு வந்தாலும் மாதவன் மனதில், 'ஏன் ராதா திரும்ப வந்து என் மனசில் ஆசை வளர்த்துவிட்டுட்ட, இன்னும் ஒரு நாள் தான் கண்ணா கஷ்டப்பட்டு அடக்கனும், தப்பித்தவறி கூட எதும் காட்டக் கூடாது' மனதை கஷ்டப்பட்டு அடக்கி வந்தான்.