2...காதலன்
மீண்டும் அறைக்குள் வந்த ராதாவை பார்த்த கிருஷ்ணன்.
"உன் இஷ்டம் இதுல என் மண்டையை உருட்டாத, ஏதோ உன் மேல இருக்க கொஞ்ச நஞ்ச நம்பிக்கையில் உன்னை விடுறேன் எதாவது குடும்ப மானத்தை வாங்கிடாத.
"உன்மேல் சத்தியமா உன் பெயர் கலங்க படுத்தமாட்டேன் மாமா" எப்போதும் அவளை நம்பாத பார்வை பார்க்கும் கிருஷ்ணன் இந்த விஷயத்தில் முழுதாக நம்பினான்.
அவனுக்கு தெரியும் அவளை பற்றி சிறுவயதிலிருந்தே அவளது ஒவ்வொரு அசைவும் அவனுக்கு அத்துப்படி.
'எதுக்கு ராதா இப்படி' வாய்வரை வந்ததை அடக்கிக் கொண்டான் கேட்டாலும் அவளிடமிருந்து பதில் வராது.
'கிருஷ்ணா உன்னை வெறுப்பேற்ற செய்யறா போல' அவனுக்கு தோன்றியது, அத்தோடு விட்டவனுக்கு அங்கிருக்க கொஞ்சமும் பிடிக்கலை.
கிருஷ்ணாக்கு கொஞ்சம் தனிமை தேவைப்பட்டது.
வீட்டில் இருந்தால் மண்டை வெடித்து சாவது நிச்சயம் என்று தெரிந்துகொண்ட கிருஷ்ணா.
எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாமதமாக வீட்டுக்கு வந்தான்.
"இவன் கிட்ட ஒண்ணு சொன்னா காதில் வாங்குரானா? இன்னைக்கு எவ்வளவு லேட்டா வந்தாலும் வச்சி செஞ்சிட வேண்டியது தான்" அடுத்த கட்ட நடவடிக்கையை செயல் படுத்த வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள் ராதா.
ஊர் முழுவதும் சுற்றி முடித்து வந்தவனுக்கு கண்கள் இறுகியது. சூடாக எதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்று தோன்றியது.
ஆனா டயார்டா இருக்கே யார் எழுவது என்ற சோம்பேரித்தனத்தால் காலை அங்கொன்றும் இங்கொன்றும் சோப்பாவில் பரப்பிட்டு படுத்து கிடந்தான்.
'எருமை எப்படி படுத்து கிடக்குது பாரு வயசு பொண்ணு இருக்கும் இடத்தில்' மனதில் ராதா அவனை அர்ச்சித்தாலும் இந்த முறை வாய்விட்டு திட்டவில்லை.
அவனால் ஆக வேண்டிய காரணம் இருந்ததால் அமைதி காத்தாள்.
"மாமா...ஆஆஆ மாமா...ஆஆஆ"