7… காதலன்
முதலில் ராதா அந்த பொம்மையை வருடிக் கொடுத்தாலும் பல நினைவுகளால் ஏற்பட்ட வலியின் காரணமாக தீப்பட்ட கை போல வெடுக்கென்று தன் புறம் இழுத்து கொண்டாள்.
“என்னாச்சி ராதா” அவளது மாற்றத்தை முதலில் கண்டு கொண்டவன் அவன் தான்.
அனு மனதில், ‘இருவரும் சரியான ஜாடிக்கு ஏத்த மூடி. பார்ப்பவர்களுக்கு பொருந்தாதது போல இருந்தாலும், மனது முழுக்கவும் இவ்வளவு பாசம்’ தன் தோழியையும் பாஸையும் மெச்சினாள்.
‘இந்த மாதவன் தான் அன் லக்கி. கையில் கிடைத்த மாணிக்கத்தை தொலைத்துவிட்டான்’
“ஒன்னுமில்ல மாமா… தலைவலிக்குது”
“இரு வண்டில போய் தைலம் எடுத்துட்டு வரேன்”
“இல்ல மாமா..” வாய் கிருஷ்ணாவிடம் பேசிட்டு இருந்தாலும் அவளது கண்கள் அந்த பொம்மையை ரசித்தது.
வருட துடித்த கைகளை அடக்கினாள்.
அந்த பொம்மையை பார்த்த இருவரின் முகத்திலும் அப்படி ஒரு அதிர்ச்சி.
சரியாக இருவரும் பழக துவங்கிய நாட்களில் இருவருக்கும் ஒரே பொழுதுபோக்கு, டாம் அண்ட் ஜெர்ரி பார்ப்பது.
அதில் வரும் கூண்டில் இருக்கும் கிளி என்றாள் ராதாக்கு கொள்ளை இஷ்டம். அந்த பொம்மையை வாங்க நினைத்தார்கள். ஆனா, தெருத்தெருவா அலைந்தும் கிடைக்கவில்லை. ஏன் சேலம் பெங்களுர் என்று ஆள் வைத்து கூட தேடி ஆச்சி. அந்த பொம்மையை தவிர மற்ற அனைத்து பொம்மையும் கிடைத்தது.
தேடிய போது கிடைக்காத அந்த பொருள் தேவையில்லாத போது கிடைத்து என்ன பலன். கிட்டத்தட்ட இவர்களின் காதல் சின்னம் போல அது.
இன்று அந்த பொம்மையை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் பழைய நினைவுகளோடு சுழன்றார்கள், முதலில் சுதாரித்தது ராதா தான்.
“நீங்க எதாவது வாங்கிட்டு வாங்க, நான் கார்கிட்ட போறேன்”
கிருஷ்ணா கையை பிடித்து நிறுத்தியவன், “இந்த கருமத்துக்கு தான் இது எல்லாம் வேண்டாம்’ன்னு சொன்னேன். கசந்த இறந்த காலத்தை மீட்டெடுப்பது எவ்வளவு தவறு தெரியுமா. அதுதான் நீ செஞ்சிட்டு இருக்க இன்னும் 29 நாள் எப்படி இருக்க போற. இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை மாதவனை அனுப்பிடலாம்”