விளையாடி கொண்டு இருந்த பையன், ஸ்கூலுக்கு வந்த பொண்ணு இரு குழந்தைகள் இரு வாரத்தில்....இங்கு போனார்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை???😔எவ்வளவு யோசித்தும் அடுத்த அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை....யோசித்து கொண்டே அமர்ந்து இருந்தான் அபிஜித்...யோசினையில் சைலண்டில் இருந்த ஃபோன் ரிங் ஆனதை கவனிக்க வில்லை....
அபிஜித் போனுக்கு அழைத்து ஓய்ந்த அவன் அம்மா இந்திராணி பஸ் ஸ்டாப்பில் வெகு நேரமாக காத்திருந்தார்.....
அந்த வழியாக ஸ்கூட்டியில் வந்தது அம்ருதா....அவள் வரும் வழியில் இவர் கையை நீட்ட....
என்னமா??யாரு நீங்க???
இங்க மேல தெரு குறுக்கு சந்து எங்கம்மா இருக்கு??எப்படி போனும்??
அடடே..அங்க தான நம்ம ஆளு வீடு இருக்கு..🤩🤩..என மனதில் நினைத்தவள்....ஏன் மா..யாரை பார்க்கணும்??வாங்க நானே கொண்டு போய் விடுரேன்...
ஐயோ உனக்கு எதுக்குமா சிரமம்...? நீ வழி சொல்லு நான் போறேன்...
இதுல என்ன சிரமம் அம்மா...இந்த பெட்டியை வேற வச்சுகிட்டு எப்படி போவீங்க...ஏறுங்க...
அவர் ரொம்ப thanks மா என கூறி கொண்டே ஏறினார்...இந்த பையனுக்கு ஃபோன் போட்டுகிட்டு இருக்கேன்..எடுக்கவே மாட்டிங்குறான்...😠
யாரும்மா??
என் புள்ளை மா...இந்த ஊருல இப்போ மாற்றல் ஆகி வந்துருக்கான்ல அபிஜித்..இன்ஸ்பெக்டர் அவன் தான்..நான் அவன் அம்மா...
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா......குறுக்கே வந்த தெய்வம் என் கூட வருதம்மா...என குத்தாட்டம் போட்டவள்....🤩.. ஓ அவரா மா...யாருகிட்டயும் பேசவே மாட்டாரு....
ஆமா மா..ரொம்ப அமைதி...வாயை திறக்க மாட்டான்....என மேலும் எதோ சொல்ல வர...அதற்குள் ஃபோன் அடித்தது....
இதோ அவன் தான் ....இரு..என்றவர்...hello..என்றார்...
அம்மா..எங்க இருக்கீங்க?? சாரி மா.. கவனிக்கலை?? இதோ வந்துட்டு இருக்கேன்..
அவன் மூச்சு விடாமல் பேச...
YOU ARE READING
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mystery / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..