அப்பா...என அம்ருதா ஓடி வந்தாள்....மகள் அவரை மடியில் தாங்கி கொண்டு கதற...மகளின் தலை வருடி கொண்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த பண்ணையாரின் உயிர் அவரின் உடல் கூட்டை விட்டு பிரிந்தது.....
அப்பா...என அவள் வெடித்து சிதறினாள்....
உடல் கூடத்தில் கிடத்தி வைக்க பட்டு இருக்க.. ஊரே வந்து மரியாதை செலுத்தியது.....அமுதன் இறுகி நின்றான்...சிறு வயதில் இருந்து தந்தை தான் அவனின் ரோல் மாடல்...ஒரு இடத்திலும் அவரை எதிர்த்து கூட பேசியது இல்லை....எழில் விஷயத்தில் மட்டும் தான் அவரை பிடிக்காமல் போனது...அதுவும் இந்த ஊரில் வளர்ந்து வாழ்ந்த ஒருவர் ஜாதி வெறி இல்லாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.......
வாசுகி அழுது ஓய்ந்து போனார் ....கணவனின் இந்நாள் நடவடிக்கை மட்டுமே அவருக்கு பிடித்தம் இல்லை..ஆனால் அவருக்கு கணவன் என்றால் உயிர்....
ஆதினி மருத்துவ மனையில் இருந்ததால் வர முடியவில்லை....அவளை எழும்பவே கூடாது என்றனர் மருத்துவர்.....
படுத்தவாரே யார் யாருக்கோ phone அடித்தாள்....இதற்கு மேல் விட கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்...
இங்கு அவரை சுட்டது யார் என காவல் துறை விசாரணை துவங்கியது....
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அபி அந்த காலடி தடத்தை பின் தொடர்ந்தான்....ஒரு கட்டத்தில் சகதி இல்லாததால் அடுத்து எந்த பக்கம் செல்ல என தெரியவில்லை...அங்கிருந்த புதரின் மறைவில் மறைந்து நின்றான்...ஏனெனில் போகும் காலடி தடம் திரும்பி வரும் தடம் இல்லை...நிச்சயம் கண்டிப்பாய் திரும்பி வருவார்கள் யாராய் இருந்தாலும் எனவே காத்திருக்க முடிவு எடுத்தான்....
அவன் எதிர்பார்ப்பு வீணாகாமல் சாமியாரை பார்த்து விட்டு வந்தார் பரசு...அவரை கண்டதும் அதிர்ந்து அமைதியாய் அவரை நோக்கி கொண்டு இருந்தான்...
பரசு சுற்றும் முற்றும் யாரேனும் பார்க்கின்றனரா என பார்த்து மெல்ல காட்டை விட்டு வெளியேறினார்....
YOU ARE READING
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mystery / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..